twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்தியாவை ஒன்றிணைப்போம்..ஒன் நேஷன் ஒன் வாய்ஸ்.. மே 3ந் தேதி சங்கீத் சேது!

    |

    சென்னை : மே 3தேதி ஒன் நேஷன் ஒன் வாய்ஸ் என்ற இசை நிகழ்ச்சி இணையம் மற்றும் தொலைகாட்சியின் வாயிலாக ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்வில் இந்தியாவின் மிக சிறந்த 100பாடகர்கள் 14 மொழிகளின் வழியாக பாடல்களை பாடியுள்ளனர்.

    பிரபல பின்னணி பாடகியான கே.எஸ்.சித்ரா தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு விளம்பர காணொளியை பகிர்ந்து இருக்கிறார். ஒன் நேஷன் ஒன் வாய்ஸ் என்ற இசை நிகழ்ச்சி மே 3ந் தேதி ஒளிப்பரப்ப உள்ளதை அதில் குறிப்பிட்டுள்ளார்கள் மேலும் இந்த இசை நிகழ்ச்சியில் இந்தியாவின் தலை சிறந்த 100பாடகர்கள் பாடியிருப்பதையும் கூறியுள்ளார்கள் .

     The concert of One Nation One Voice airs on 3rd may

    சங்கீத் சேது என்ற இசை நிகழ்ச்சி ஏப்ரல் 10,11 மற்றும் 12 நடந்தது இதில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், கே.ஜே.யேசுதாஸ் போன்ற முக்கிய பாடகர்கள் 18பேர் இணைந்து இசை நிகழ்வில் வீட்டில் இருந்தே படியே பாடினர். இந்த நிகழ்ச்சி இணையத்தில் ஒளிப்பரப்பானது. இந்த நிகழ்ச்சியை இந்தியா மற்றும் மற்ற நாடுகளில் இருந்து சுமார் 23கோடிக்கும் அதிகமான மக்கள் இணையத்தின் வாயிலாக பார்த்து மகிழ்ந்தனர்.

     The concert of One Nation One Voice airs on 3rd may

    இதை தொடர்ந்து 100சிறந்த பாடகர்கள் இணைந்து சங்கீத் சேதுவின் தொடர்சியாக ஒன் நேஷன் ஒன் வாய்ஸ் நிகழ்வில் முக்கிய பாடகர்களின் ஆசியின் கீழ் பாடியிருக்கின்றனர். இந்த இசை நிகழ்ச்சி தொலைகாட்சி, சமூக வலைத்தளம், இணையதளம் மற்றும் ஓடிடி ஆகிய அனைத்து வகையான வழியிலும் மக்களை சென்றடைய உள்ளது. இதிலிருந்து வரும் தொகை முழுவதும் பிரதமரின் கொரோனா நிவாரண நிதிக்கு கொடுக்க பட உள்ளது.

     The concert of One Nation One Voice airs on 3rd may

    இந்த ஒன் நேஷன் ஒன் வாய்ஸ் நிகழ்ச்சியில் கொரோனா பற்றிய விழிப்புணர்வு பாடல் ஒன்றை 100பாடகர்களும் அவரவர்கள் வீட்டில் இருந்த படியே பாடி உள்ளனர். இந்தியாவின் சிறந்த பாடகர்களான கே.எஸ்.சித்ரா, சங்கர் மஹாதேவன், அசா போஸ்லே, ஹரிஹரன், கைலாஷ் கீர், உதித் நாராயணன் போன்ற முன்னணி பாடகர்கள் பாடியுள்ளனர்.

    இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால், 14 மொழிகளில் இதை பாடி உள்ளனர் . ஹிந்தி , பெங்காலி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், போஜ்பூரி, அசாமிஸ், காஷ்மீரி, சிந்தி, ராஜஸ்தானி மற்றும் ஒடியா ஆகிய மொழிகளில் பாடி உள்ளனர்.

     The concert of One Nation One Voice airs on 3rd may

    Recommended Video

    Andrea Jeremiah special dedication for Chennai Police | Andrea

    இந்த நிகழ்வை இந்திய சிங்கர் ரைட்ஸ் அசோசியேஷன் நிறுவனம் எடுத்து நடத்தியுள்ளது. இந்த நிகழ்வை பாடகர்கள் சோனு நிகாம், ஶ்ரீனிவாஸ் மற்றும் சஞ்சய் தன்டான் ஆகியோர் தங்களின் பெரும் முயற்சியால் ஒருங்கிணைத்து உள்ளனர்.

    English summary
    The concert of One Nation One Voice airs on 3rd may
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X