Sugar Baby: ”என்ன வேணும் உனக்கு”.. சுகர் பேபி பாடலில் பட்டையைக் கிளப்பிய த்ரிஷா.. படத்துல முழுசா வருமா?

சென்னை: உயிரே படத்தில் பல ரசிகர்களை இன்றைக்கும் ஏங்கி பாட வைக்கும் "பூங்காற்றிலே உன் சுவாசத்தை" பாடலையே ரேடியோ ஆஃப் செய்து கட் பண்ணி விடுவார் மணிரத்னம். தக் லைஃப் படத்தில் த்ரிஷாவுக்காக தனித்துவமாக உருவாக்கப்பட்ட இன்ட்ரோ பாடல் எல்லாம் முழுசா படத்தில் இடம்பெறுமா என்பது சந்தேகம் தான் என பாடல் வெளியானதும் நமக்குத் தோன்றும் முதல் விஷயமாக இருக்கிறது.

ஆயுத எழுத்து படத்தில் "யாக்கை திரி காதல் சுடர்" என த்ரிஷாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் பாடல் போட அந்த பாடல் என்றைக்குமே த்ரிஷாவின் தொண்டர்களுக்கு ஃபேவரைட் பாடலாக உள்ளது. ஆனால், தக் லைஃப் படத்தின் செகண்ட் சிங்கிள் என ஏதோ சின்ன வீட்டுக்கான பாடலாக குறியீடுகளுடன் 'சுகர் பேபி' பாடலை வெளியிடப் போவதாக அறிவிப்பு வெளியானதில் இருந்து "உயிர் உங்களுடையது தேவி" என சொல்லிக் கொண்டிருந்த ரசிகர்கள் மயான மோடுக்கு சென்று விட்டனர்.

Thug Life Second Single Sugar Baby Song out now and Trisha stuns everyone with her hook steps

தக் லைஃப் படத்தில் அபிராமி கமல்ஹாசனுக்கும் த்ரிஷா சிம்புவுக்கும் ஜோடியாக இருப்பார்கள் என பகல் கனவு கண்டு கொண்டிருந்த ரசிகர்களுக்கு படத்தின் டிரைலர் தம்பி இது நீங்க நினைக்கிற மாதிரியான படம் இல்லை, கமல்ஹாசன் கதையில் உருவான பக்கா கேங்ஸ்டர் படம் என்பது போட்டு உடைக்கப்பட்டுள்ளது.

வெளியானது சுகர் பேபி பாடல்: பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை தேவியாக த்ரிஷா நடித்து தூள் கிளப்பியிருந்தார். வந்தியத்தேவன் கார்த்தி போல ஒட்டுமொத்த ர்சிகர்களும் உயிர் உங்களுடையது தேவி என உருக ஆரம்பித்தனர். ஆனால், தொடர்ந்து த்ரிஷாவுக்கு நெகடிவ் ஷேடு கதாபாத்திரங்களையே இயக்குநர்கள் எழுத ஆரம்பித்து அந்த ஜானுவை அப்படியே காலி பண்ணிடுவாங்க போல தெரிகிறது. இந்நிலையில், மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள தக் லைஃப் படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான செகண்ட் சிங்கிள் பாடலாக "சுகர் பேபி" பாடல் இன்று வெளியானது.

Take a Poll

பாட்டும் பாடுறாரா த்ரிஷா?: சுகர் பேபி லிரிக் வீடியோவில் திடீரென நடிகை த்ரிஷா ரெக்கார்டிங் ரூமில் நின்றுக் கொண்டு பாட்டுப் பாடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்ற நிலையில், இந்த படத்தில் த்ரிஷா சொந்தக் குரலில் பாடியிருக்கிறாரா என ஷாக் ஆகிவிட்டனர். ஆனால், பாடலை அலெக்ஸாண்ட்ரா ஜாய், சுபா, சரத் சந்தோஷ் உள்ளிட்டோர் தான் பாடியுள்ளனர். த்ரிஷா அங்கேயும் பாடுவது போல ஆக்டிங் மட்டுமே கொடுத்திருக்கிறார்.

என்ன வேணும் உனக்கு: ரசிகர்களை பார்த்து "என்ன வேணும் உனக்கு.. கொட்டிக் கொட்டி கிடக்கு" என த்ரிஷா சொல்வது போல பாடல் உருவாகியிருக்கிறது. ஜிங்குச்சா பாடல் செம வைபாக ஏகப்பட்ட ரீல்ஸ்களில் டிரெண்டான நிலையில், சுகர் பேபி பாடல் எந்தளவுக்கு டிரெண்டாகும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். பாடல் வரிகள் சிறப்பாக இருந்தாலும், ஏ.ஆர். ரஹ்மானின் இசை பிரம்மாதமாக இருப்பது போல தெரியவில்லை. ஸ்லோ பாய்சனாக இருக்குமா என்பதை ரிப்பீட் மோடில் கேட்டு ரசிகர்கள் சொல்ல ஆரம்பிப்பார்கள்.

ஆடியோ லாஞ்ச்: வரும் மே 24ம் தேதி தக் லைஃப் படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா நேரு ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. தக் லைஃப் படத்தில் இடம்பெற்றுள்ள "விண்வெளி நாயகா" உள்ளிட்ட மற்ற பாடல்கள் அங்கே வெளியாக காத்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X