2021ல் ஹிட்டான டாப் 5 பெப்பியான பாடல்கள்... ஜாலியா கேட்கலாம்,ஆடலாம் பாடலாம் ரகம்

சென்னை : ஒவ்வொரு படத்தின் வெற்றிக்கும் பாடல்கள் மிகப் பெரிய காரணமாக உள்ளது.இப்பொழுதெல்லாம் சினிமா பாடல்கள் ஒரு பக்கம் ஆல்பம் சாங்ஸ் ஒரு பக்கம் ஹிட் ஆகி கொண்டு இருக்கிறது.

அவ்வாறு வெளியாகும் பாடல்கள் ஹிட்டாகி இணையதளத்தை கலக்குன்றன. ஒரு சில பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டி மனதை ஜாலியான நிலைக்கு மாற்றுகிறது.

அந்த வகையில் கடந்த 2021 இணையதளத்தை கலக்கிய வைரல் பாடல்களில் டாப் 5 பெப்பியான பாடல்களின் லிஸ்ட் இதோ.

வாத்தி கம்மிங்

வாத்தி கம்மிங்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் நடனத்தில் மிகவும் சிறந்தவர் என்பது பலரும் அறிந்ததே. விஜய் நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படங்களின் பாடல்களும் அதில் இடம்பெறும் நடனமும் தனி கவனத்தை பெற்றிருக்கும் . அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் அனிருத் இசையில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் மிகப் பெரிய வெற்றி பெற்றது. அதில் வாத்தி கம்மிங் பாடல் அனைத்து நிகழ்ச்சிகளிலும் சமூக வலைதளங்களிலும் அதிகமாக கேட்கப்பட்ட ஒன்றாக இருந்தது. திரை பிரபலங்கள்,ரசிகர்கள், சிறியவர்கள், பெரியவர்கள்,குழந்தைகள் என அனைவரையும் ஆட்டம் போட வைத்த இந்த பாடல் இன்று வரை வைரல் பாடல் டாப் 5 லிஸ்டில் உள்ளது

மாங்கல்யம்

மாங்கல்யம்

உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறி ஈஸ்வரன் படத்தின் மூலம் மிகப் பெரிய கம்பேக் கொடுத்த நடிகர் சிம்புவுக்கு இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது. இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்திற்கு எஸ் தமன் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இதில் டூயட் கலந்த குத்து பாடலாக மாங்கல்யம் இடம்பெற்றது. கேட்கவும் பார்க்கவும் அட்டகாசமாக இருந்த இந்த பாடலில் சிம்புவின் நடனம் அனைவரையும் ஆர்ப்பரித்தது . மொழி தெரியாதவர்கள் கூட இந்த பாடலுக்கு இணையதளத்தில் ஆட்டம் போட்டு பாடலை மேலும் வைரல் ஆக்கினர். 2021ல் வைரல் பாடலாக ஈஸ்வரன் மாங்கல்யம் டாப் 5ல் உள்ளது

செல்லம்மா

செல்லம்மா

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வந்த டாக்டர் படத்தின் ரிலீஸ் தேதியை தாமதமாக ஆனாலும் இப்படத்தில் முதல் பாடலாக வெளியான செல்லம்மா சென்சேஷனல் ஹிட்டடித்தது. எதையும் வித்தியாசமாக செய்யும் இயக்குனர் நெல்சன் செல்லம்மா பாடல் புரோமோவையும் மிக வித்தியாசமாக உருவாக்கி வெளியிட்டு இருந்தது அனைவர் மத்தியிலும் பாராட்டுக்களை பெற்றது. அனிருத் இசையில் க்யூட் பெப்பே சாங்காக வெளியான செல்லம்மா பாடல் இன்றுவரை வைரல் லிஸ்டில் டாப் 2ல் உள்ளது

பேர் வச்சாலும்

பேர் வச்சாலும்

இசைஞானி இளையராஜாவின் இசையில் பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த பாடல் வெளியாகி இருந்தாலும் தற்போது உள்ள தலை முறைக்கு ஏற்றவாறு யுவன் சங்கர் ராஜா இந்த பாடலை மிக அழகாக ரீமேக் செய்து டிக்கிலோனா படத்தில் பயன்படுத்தி இருந்தார். கேட்கும் அனைவரின் மனதையும் இளமையாக்கி குத்தாட்டம் போட வைக்கும் இந்தப் பாடல் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தவறாமல் ஒழிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த பாடல் இணையதளத்தில் டாப் 5 வைரல் லிஸ்டில் இடம் பெற்றுள்ளது .

ஊஊ சொல்றியா மாமா

ஊஊ சொல்றியா மாமா

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் ஊஊ சொல்றியா மாமா. தேவி ஸ்ரீபிரசாத் இசையில் ஆண்ட்ரியாவின் மயக்கும் குரலில் உருவான இந்த பாடல் வெளியானது முதலே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாமல் பேசப்பட்டது. இந்த பாடலுக்கு நடிகை சமந்தா சிறப்பு நடனமும் ஆடியுள்ளார். சர்ச்சைக்குரிய வரிகள் ஆண்ட்ரியாவின் போதையேற்றும் குரல் என இளைஞர்களை வெகுவாக கவர்ந்த இந்த பாடல் இப்பொழுது இணையதளத்தில் வைரலாகி 2021ல் டாப் 5 வைரல் சாங் லிஸ்டில் இடம் பிடித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X