முருகதாஸ் ஒரு குட்டி மணிரத்னம்! - விஜய் புகழாரம்

By Shankar

இயக்குநர் ஏஆர் முருகதாஸ் ஒரு குட்டி மணிரத்னம் என்று புகழாரம் சூட்டினார் விஜய்.

கலைப்புலி தாணு தயாரிப்பில், விஜய் - காஜல் அகர்வால் நடித்துள்ள படம் துப்பாக்கி. ஏ ஆர் முருகதாஸ் இயக்கியுள்ளார். ஏழாம் அறிவு படத்துக்குப் பிறகு முருகதாஸ் இயக்கும் படம் இது.

பாடல் வெளியீடு...

பாடல் வெளியீடு...

இந்தப் படம் குறித்த விளம்பரங்கள், பாடல்கள் வெளியாவது பல்வேறு பிரச்சினைகள் காரணமாக இழுத்துக் கொண்டே போனது. ஒருவழியாக வழக்குகள் வம்புகள் முடிந்து, நேற்று முன்தினம் விளம்பரம் வெளியானது. இன்று காலை சென்னை பார்க் ஷெராட்டனில் பாடல்கள் வெளியிடப்பட்டன.

கலைப்புலி தாணு, முருகதாஸ், விஜய், காஜல் அகர்வால், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், நா முத்துகுமார் உள்ளிட்ட பாடலாசிரியர்கள் பங்கேற்றனர்.

கூகுள் கூகுள்... யாஹூ யாஹூ...

கூகுள் கூகுள்... யாஹூ யாஹூ...

படத்தின் பாடல்களில் கூகுள் கூகுள்... என்று தொடங்கும் ஒரு பாடல் ஹைலைட்டாக அமைந்தது. இந்தப் பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளார். இந்தப் பாடலை மேடையில் அழகாக பாடிக் காட்டி கைத்தட்டல்களை அள்ளினார் விஜய்.

குட்டி மணிரத்னம்..

குட்டி மணிரத்னம்..

தனது பேச்சின்போது, முருகதாஸின் உழைப்பு, சுறுசுறுப்பைப் பாராட்டினார் விஜய்.

"ரொம்ப ரொம்ப டேலண்ட்டான, அப்டேட்டட் நாலெட்ஜ் உள்ளவர் முருகதாஸ். இந்த படமும் ரொம்ப ரொம்ப அழகா நான் நெனைச்ச மாதிரியே வந்திருக்கு. இது எனது கனவுப் படம்... ஏ ஆர் முருகதாஸுக்கு நான் ஒரு செல்லப் பெயர் வைத்துள்ளேன். அவர் ஒரு குட்டி மணிரத்னம்," என்றார் விஜய்.

தீபாவளி சரவெடி

தீபாவளி சரவெடி

துப்பாக்கி படம் தீபாவளி ஸ்பெஷலாக வருகிறது. இந்தப் படத்துடன் நீதானே என் பொன்வசந்தம், அலெக்ஸ் பாண்டியன், போடா போடி போன்ற படங்கள் ஆரம்பத்தில் மோதத் தயாராகிவிட்டன. இப்போது துப்பாக்கிக்கு எழுந்துள்ள எதிர்ப்பார்ப்பு, அது ரிலீசாகவிருக்கும் பிரமாண்டம் போன்றவற்றால், இவற்றில் எந்தெந்த படங்கள் பின்வாங்குமோ தெரியவில்லை என்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.

துப்பாக்கி பாடல் வெளியீடு படங்கள்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X