வெளியானது உடன்பிறப்பே படத்தின் இரண்டாவது சிங்கிள்!
சென்னை : ஜோதிகா, சசிக்குமார், சமுத்திரக்கனி, சூரி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ளது உடன்பிறப்பே படம்.
வரும் 14ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது உடன்பிறப்பே.
படத்தின் இரண்டாவது பாடல் சித் ஸ்ரீராம் குரலில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

உடன்பிறப்பே படம்
ஜோதிகா, சசிக்குமார், சமுத்திரக்கனி மற்றும் சூரி ஆகியோரின் நடிப்பில் ரிலீசுக்கு தயாராக உள்ள படம் உடன்பிறப்பே. அண்ணன், தங்கை பாசத்தை மையமாக கொண்ட இந்தப் படத்தின் டீசர், ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

14ம் தேதி ரிலீஸ்
கணவன் மற்றும் அண்ணனுக்கு இடையில் சிக்கி பரிதவிக்கும் கதாபாத்திரத்தில் ஜோதிகா நடித்துள்ளார். படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. வரும் 14ம் தேதி படம் அமேசான் ப்ரைமில் ரிலீசாக உள்ளது. சூர்யாவின் ஜெய் பீம் படமும் அமேசானில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

முதல் பாடல்
உடன்பிறப்பே படத்தின் முதல் பாடல் அண்ணே யாருன்னே இரு தினங்களுக்கு முன்பு லிரிக் வீடியோவாக வெளியான. இந்தப் பாடலை ஷ்ரேயா கோஷல் பாடியிருந்தார். இந்தப் பாடலில் படத்தின் ஸ்டில்ஸ் உள்ளிட்டவை சிறப்பான வகையில் பயன்படுத்தப்பட்டிருந்தன.

இரண்டாவது
இந்நிலையில் இன்றைய தினம் படத்தின் இரண்டாவது பாடல் லிரிக் வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது. ஒத்தப்பனை காட்டேரி என்று துவங்கும் அந்தப் பாடலை சித் ஸ்ரீராம் தனது மயக்கும் குரலில் பாடியுள்ளார். ஜோதிகா, சசிக்குமார் இல்லாமல் இளம் ஜோடி ஒன்று இந்தப் பாடலில் இடம்பெற்றுள்ளது.

டி இமான் இசை
டி இமான் இசையில் இரண்டு பாடல்களும் சிறப்பாக அமைந்துள்ளன. கிராமத்து பின்னணியில் குடும்ப உறவுகளின் மேன்மையை கையில் எடுத்துள்ளார் இயக்குநர் இரா சரவணன். 2டி என்டர்டெயின்மெண்ட் எப்போதும் சிறப்பான படங்களை ரசிகர்களுக்கு கொடுத்துவரும் நிலையில் இந்தப் படமும் ரசிகர்களுக்கு சிறப்பான அனுபவத்தை கொடுக்கும் என்று நம்பலாம்.

அண்ணன் -தங்கை பாசம்
குடும்ப உறவுகளை குறிப்பாக அண்ணன் -தங்கை பாசத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்தப்படம் வெளியாகவுள்ளது. ஜோதிகா மற்றும் சசிக்குமார் இந்தப் படத்தில் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளனர். மேலும் அவர்கள் இருவரும் அண்ணன், தங்கையாக வாழ்ந்துள்ளனர் என்று இயக்குநர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











