மார்ச் 1ம் தேதி கமலின் உத்தம வில்லன் இசை வெளியீடு

By Siva

சென்னை: கமல் ஹாஸன் நடித்துள்ள உத்தம வில்லன் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மார்ச் மாதம் 1ம் தேதி நடைபெறுகிறது.

கமல் ஹாஸன் கதை, திரைக்கதை எழுதி தனது நண்பர் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் நடித்துள்ள படம் உத்தம வில்லன். இந்த படம் மூலம் கோலிவுட்டில் இத்தனை நாட்களாக நடிகராக இருந்த ரமேஷ் அரவிந்த் இயக்குனராக அறிமுகமாகிறார்.

இந்த படத்தில் கமல் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். படத்தின் ட்ரெய்லர் அசத்தலாக இருந்தது. இதனால் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. உத்தம வில்லன் தான் அண்மையில் மரணம் அடைந்த இயக்குனர் கே. பாலச்சந்தர் நடித்த கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பதி பிரதர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மார்ச் மாதம் 1ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

படத்திற்கு கிப்ரான் இசை அமைத்துள்ளார். உத்தம வில்லன் படத்தில் விஸ்வரூபம் படத்தில் கமலுடன் நடித்த பூஜா குமார் மற்றும் ஆண்ட்ரியா நடித்துள்ளனர். மேலும் டாக்டர் விஸ்வநாத், நாசர், ஊர்வசி, ஜெயராம், பார்வதி நாயர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X