'தவிச்ச வாய்க்கு தண்ணியில்ல'... கண்ணீரை சொல்லும் காவிரி தண்ணீர் பாடல்... அவசியம் பாருங்க!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி உயிர்கொடு காவிரி என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், விவசாயிகளின் வலியை உணர்த்தும் வகையிலும் உயிர்கொடு காவிரி என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

காவரி டெல்டா விவசாயிகள் தண்ணீர் இல்லாத காரணத்தால் பயிர் செய்ய முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். கடன் தொல்லையால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுவிட்டார்கள்.

Uyirkodu cauvery song for cauvery management board

காவிரியில் இருந்து தண்ணீர் திறக்க கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வரும் நிலையில், திடமான நடவடிக்கை எடுக்காமல் மத்திய அரசும் மெத்தனமாக செயல்பட்டு வருகிறது. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் கூட இன்னும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு காலம்தாழ்த்தி வருகிறது. கர்நாடக அரசு உச்ச நீதிமன்ற உத்தரவை மதிப்பதில்லை. பிறகு யார் சொன்னால் தான் இவர்கள் கேட்பார்கள் என்ற வலியிலும், வேதனையிலும் விவசாயிகள் தவிக்கிறார்கள்.

காவிரி மேலாண்மை வாரியம் வேண்டி, விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சிகளும் களத்தில் இறங்கியுள்ளன. இந்நிலையில் இந்த போராட்டத்துக்கு வலுசேர்க்கும் வகையில் உயிர்கொடு காவரி பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்திரா பிராஜெக்ட்ஸ் நிதியுதவியுடன், தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த இயக்குனர் ராஹேஷ், இந்த பாடலை எடுத்துள்ளார். சென்னையில் நடைபெற்ற விழாவில் திரைப்பட இயக்குனர் வ.கௌதமன் பாடலை வெளியிட்டார்.

Uyirkodu cauvery song for cauvery management board

தவிச்ச வாய்க்கு தண்ணியில்ல என்ற வரிகளுடன் தொடங்குகிறது பாடல். மிகவும் உணர்வுபூர்வமாக பாடல் வரிகளை எழுதியிருக்கிறார் பாடலாசிரியர் வைரபாரதி. 'வெள்ள வேட்டி சாயம் போச்சு', 'கண்ணீர் மொண்டு குடிக்க தண்ணீர் இல்ல', 'பைப்ப தொறந்தா காத்துகூட வரல' போன்ற வரிகள் விவசாயிகளின் இன்றைய நிலையை தோலுரித்துக் காட்டுகின்றன.

உணர்வுபூர்வமான இந்த பாடலுக்கு அச்சு இசையமைத்திருக்கிறார். முப்போகம் விளைந்த தஞ்சை தரணி, வறண்டு கிடக்கும் இன்றை சூழலை இயல்பாக படம் பிடித்து காட்டியிருக்கிறார்கள். வறண்டு கிடக்கும் காவிரி ஆற்றுப்படுகையில் மணல் அல்லப்படுது, அதில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுவது, வெற்று நிலத்தை கட்டிப்புரலும் விவசாயிகள் என காட்சிகள் அனைத்தும் நெஞ்சை உலுக்குகின்றன. நடிகர்களை வைத்து எடுக்காமல், உண்மையான விவசாயிகளையே பாடலுக்கு பயன்படுத்தி இருப்பது நிறைவு.

தமிழக விவசாயிகளுக்காக எடுக்கப்பட்டுள்ள இந்த பாடலை உலகெங்கும் பரப்பி, செவிடர்களின் காதுகளை திறக்கச் செய்ய வேண்டியது தமிழர்களின் கடமை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X