வேற லெவல் ட்ரெண்டாகும் வால சுருட்டு பாடல்..சீக்கிரமே செம சம்பவம் இருக்கு !
சென்னை : திரௌபதி பட இயக்குனரின் இன்னொரு படைப்பான ருத்ர தாண்டவம் படம் வெளிவருவதற்கு முன்னே வைரலாகி கொண்டு இருக்கின்றது .
Recommended Video
பழைய வண்ணாரப்பேட்டை ,திரௌபதி போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் மோகன் ஜி தற்போது ருத்ர தாண்டவம் என்ற படத்தை இயக்கியுள்ளார் .
இந்த படத்தின் போஸ்டர், லிரிக்கல் வீடியோக்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது.அதிலும் வால சுருட்டு பாடல் தற்போது ட்ரெண்டாகி உள்ளது.

பழைய வண்ணாரப்பேட்டை
2016ஆம் ஆண்டு வெளிவந்த பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கியவர் தான் மோகன் ஜி .அந்த படத்தில் ப்ரஜன் ,கருணாஸ்,ரிச்சர்ட் ரிஷி போன்ற பலரும் நடித்து இருந்தனர் .வருமான ரீதியாக அப்படம் சரியாக போகவில்லை என்றாலும் ,விமர்சன ரீதியாக பல கருத்துக்களை பெற்றது .மேலும் அந்த படத்தில் நாயகனாக நடித்த ப்ரஜனுக்கு அதுவே முதல் படம்.எனவே அவரது ரசிகர்களால் அப்படம் நல்ல வரவேற்பை பெற்றது

திரௌபதி
பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் கதை வித்யாசமாக இருந்த நிலையில்,மோகன் ஜி இயக்கிய அடுத்த படம் தான் திரௌபதி,இந்த படத்திலும் ரிசார்ட் ரிஷி, சௌந்தர்யா,ஷீலா ராஜ்குமார் போன்ற பலரும் நடித்து இருந்தனர்.எதார்த்த வாழ்வில் நடக்கக்கூடிய பல காட்சிகளை கொண்டதால் இப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

அடுத்த படைப்பு
இவரது அடுத்த படைப்பான ருத்ர தாண்டவம்,அக்டோபர் ஒன்றாம் தேதி திரையரங்கில் வெளிவர தயாராக உள்ளது. இந்நிலையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய மோகன் ஜி, தனது பல கருத்துக்களை முன் வைத்தார் .அவர் பேசிய பல கருத்துக்கள் சர்ச்சையாக கருதப்பட்ட நிலையில், படத்தின் எதார்த்தத்தையும், படம் உருவாக காரணமாக இருந்த கருவையும் தெளிவுபடுத்தினார்.

பேர் போன சர்ச்சைகள்
எதார்த்தை கூறும் போது அது சர்ச்சையாக மாறுகிறது என்றும், நிதர்சனமான உண்மையை மட்டுமே தான் படமாக எடுப்பதாகவும் கூறினார் .மேலும் பெரிய ஹீரோக்களை விட தன்னை சுற்றியுள்ள விஷயத்தில் தான் தனக்கு ஆர்வம் அதிகம் என்றும் கூறினார்.இப்படத்தில், கவுதம் மேனன்,தம்பி ராமையா,ராதா ரவி, மாளவிகா அவினாஷ், போன்ற பல நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.

லிரிக்கல் வீடியோ
ஹிந்து ,கிறிஸ்துவ மதத்தினரின் கருத்துக்களும்,படத்தில் கவுதம் மேனன் பேசும் வசனங்களும் வைரலாக பேசப்பட்டும்,பகிரப்பட்டும் வந்த நிலையில் தற்போது இப்படத்தின் வாலை சுருட்டு பாடலின் லிரிக்கல் வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது.அப்பாடலில் ரிச்சர்ட் ரிஷி போலீஸ் அதிகாரியாக வருகிறார்.சண்டை காட்சிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடல் இப்படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











