எளிமையாக நடந்த “வானம் கொட்டட்டும் “ இசை வெளியீட்டு விழா

Recommended Video

Vaanam Kottatum Public Opinions | Sarath Kumar | Rathika | Aishwarya Rajesh | Vikram Prabhu

சென்னை : வானம் கொட்டட்டும் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று மிக எளிமையாக நடைபெற்றது.

மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா ப்ரொடக்‌ஷன் நிறுவனம் தயாரித்து வரும் படம் வானம் கொட்டட்டும். இப்படத்திற்கு மணிரத்னம் திரைக்கதை எழுத, புதுமுக இயக்குனர் தனா இயக்குகிறார். இவர் ஏற்கனவே மணிரத்னத்தின் உதவியாளராக சில படங்களில் பணி புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vaanam kottatum audio release

இதில் விக்ரம் பிரபு மற்றும் ஜஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளனர். மேலும் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக ஒரு குடும்ப கதையாக உருவாக்கப்பட்டுள்ளது.

இதுவரை சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடிய பாடகர் சித் ஸ்ரீராம் இப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இதில் மாடோனா செபாஸ்டின் நடித்துள்ளார். படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனை அடுத்து படத்தின் டீசர் வெளியாகி அதுவும் நல்ல வரவேற்பபை பெற்றுள்ளது.

Vaanam kottatum audio release

இதனிடையே இன்று படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் நடைபெற்றது. இதில் படத்தின் நாயகன் விக்ரம் பிரபு மற்றும் நடிகை ஜஸ்வர்யா ராஜேஷ் உடன் சாந்தனு மற்றும் பலர் கொண்டனர்.

இதில் பேசிய விக்ரம் பிரபு என் அப்பா இங்கு தான் படித்தார். நானும் இங்கு தான் படித்தேன் என்று கூறிய உடன் மாணவர்கள் அனைவரும் ஆரவாரம் செய்தனர். படத்தின் இசை வெளியீட்டு விழாவை எளிமையாக நடத்தி முடித்தனர். படத்தின் டிரெய்லர் மாலை வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X