அர்ஜுன் ரெட்டியை மிஞ்சிய பாலாவின் வர்மா...'வானோடும் மண்ணோடும்' பாட்டை பாருங்க தெரியும்!
வர்மா படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
சென்னை: வர்மா படத்தின் முதல் பாடலான வானோடும் மண்ணோடும் பாடல் வெளியாகியுள்ளது.
தெலுங்கி சூப்பர் டூப்பர் ஹிட் படமான அர்ஜுன் ரெட்டியின் தமிழ் ரீமேக் தான் வர்மா. நடிகர் விக்ரமின் மகன் துருவ் ஹீரோவாக அறிமுகமாகும் இப்படத்தினை பாலா இயக்குகிறார்.
இப்படத்துக்கு ரதன் இசையமைத்துள்ளார். மேகா சவுத்திரி, ரைசா வில்சன், ஈஸ்வரி ராவ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
வானோடும் மண்ணோடும்
இப்படத்தின் முதல் பாடலான வானோடும் மண்ணோடும் பாடல் நேற்று இரவு வெளியானது. இப்பாடலை வைரமுத்து எழுதியுள்ளார். கிட்டதட்ட நான் கடவுள் படத்தில் வரும் பிச்சை பாத்திரம் பாடலை போன்று இந்த பாடல் அமைக்கப்பட்டுள்ளது.

சிவன் சிலை
பாடலின் துவக்கத்தில் பிரமாண்ட சிவன் சிலை காட்டப்படுகிறது. அதன் பின்னர் துருவ் விக்ரமின் பயணக் காட்சிகள் புகைப்படங்களாக இடம்பெறுகின்றன. பார்ப்பதற்கும், கேட்பதற்கும் பாடல் இனிமையாக இருக்கிறது.

பாலா ஸ்டைல்
பாடலில் இடம்பெற்றுள்ள காட்சிகளை வைத்து பார்க்கும் போது இது அக்மார்க் பாலா படம் என்பது தெளிவாகிறது. என்ன தான் ரீமேக்காக இருந்தாலும், பாலாவுக்கு என ஒரு ஸ்டைல் இருக்கும். அது இதில் தெளிவாக தெரிகிறது.

அர்ஜுன் ரெட்டி பார்த்தவர்கள்...
அர்ஜுன் ரெட்டி படத்தை பார்த்தவர்களுக்கு வர்மா பாடல் காட்சிகளை பார்க்கும் போது இது நிச்சயம் தெரியும். ஏனென்றால் அந்த படத்தில் மதம் மற்றும் ஆன்மீகம் சம்மந்தமான விஷயங்கள் எதுவும் இடம்பெறாது.


Click it and Unblock the Notifications











