300 மில்லியன் பார்வை சாதனையை நெருங்கும் வாத்தி கம்மிங் பாடல்

சென்னை : விஜய் நடித்த மாஸ்டர் படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்பட்டது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படம் மிகப் பெரிய பிளாக் பஸ்டர் படமாக அமைந்தது. கொரோனா லாக்டவுனிற்கு பிறகு, தியேட்டர்கள் திறக்கப்பட்டதும் அதிக வசூலை பெற்ற படம் இது தான்.

மக்களை மீண்டும் தியேட்டர்களுக்கு வரவழைத்து, தியேட்டர் உரிமையாளர்களுக்கு நம்பிக்கை கொடுத்த படம் மாஸ்டர். அதன் பிறகு மற்ற படங்களும் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டன. படம் ரிலீசாவதற்கு முன்பே மாஸ்டர் படத்தின் பாடல்கள் செம ஹிட்டாகி, பல சாதனைகளை படைத்தன.

வரவேற்பை பெற்ற பாடல்

வரவேற்பை பெற்ற பாடல்

மாஸ்டர் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இவரது இசையில் ஃபஸ்ட் சிங்கிளாக குட்டி ஸ்டோரி பாடல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து 2020 ம் ஆண்டு மார்ச் மாதம் வாத்தி கம்மிங் பாடல் வெளியிடப்பட்டது. அன்றைய தினமே இந்த பாடலில் லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டு, ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

சாதனை படைத்த வாத்தி கம்மிங்

சாதனை படைத்த வாத்தி கம்மிங்

2021 ம் ஆண்டு ஜனவரி மாதம் வாத்தி கம்மிங் வீடியோ சாங் யூட்யூப்பில் வெளியிடப்பட்டது. இந்த பாடலுக்கு ஞான பாலச்சந்தர் பாடல் வரிகள் எழுதி இருந்தார். தினேஷ் குமார் நடனம் அமைத்திருந்தார். யூட்யூப்பில் வெளியிடப்பட்ட 24 மணி நேரத்தில் மிக அதிகமானவர்ளால் பார்க்கப்பட்ட டாப் பாடல்களின் வரிசையில் 13 வது இடத்தை பிடித்து இந்த பாடல் சாதனை படைத்தது.

அதிகமானவர்கள் பார்த்த பாடல்

அதிகமானவர்கள் பார்த்த பாடல்

மெர்சல் படத்தில் வரும் ஆளப்போறான் தமிழன் பாடலுக்கு பிறகு அதிகமானவர்களால் பார்க்கப்பட்ட விஜய் பாடல் என்றால் அது வாத்தி கம்மிங் பாடல் தான். அந்த அளவிற்கு செம ஹிட் ஆனது. சினிமா, சின்னத்திரை, விளையாட்டு வீரர்கள் என வாத்தி கம்மிங் பாடலுக்கு தோளை குலுக்கி ஆடாத பிரபலங்களே கிடையாது எனும் அளவிற்கு இந்த பாடல் அனைவரையும் கவர்ந்தது.

விரைவில் 300 மில்லியன் வ்யூ

விரைவில் 300 மில்லியன் வ்யூ

தோளை குலுக்கு ஆடும் ஸ்டெப்பிற்காகவே இந்த பாடல் தாறுமாறாக ஹிட் ஆனது என்றே சொல்லலாம். இந்த பாடலுக்கு நடனம் ஆடி பிரபலங்கள் வெளியிட்ட வீடியோக்களும் செம வைரலாகின. இந்நிலையில் வாத்தி கம்மிங் பாடல், யூட்யூப்பில் 2.8 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது. விரைவில் 300 மில்லியன் பார்வைகள் சாதனையை இந்த பாடல் எட்ட உள்ளது.

டிரெண்டிங் ஆக்கிய ரசிகர்கள்

டிரெண்டிங் ஆக்கிய ரசிகர்கள்

வாத்தி கம்மிங் பாடல் புதிய சாதனை படைத்ததை அடுத்து ட்விட்டரில் வாத்தி கம்மிங் என்ற ஹாஷாடேக்கை விஜய் ரசிகர்கள் உருவாக்கி, அதை டிரெண்டிங் ஆக்கி உள்ளனர். இந்த ஹாஷ்டேக்கில் ஏராளாமானோர் இந்த சாதனையை கொண்டாடி கமெண்ட் செய்து வருகிறார்கள். விஜய் தற்போது நடித்து வரும் பீஸ்ட் படத்தின் பாடல்கள், வாத்தி கம்மிங் பாடலின் சாதனையையும் முறியடிக்கும் என பலர் கூறி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X