தனுஷ் ரசிகர்களுக்கு டிபன் கிடையாது, ஃபுல் மீல்ஸ் கொடுக்கப்போறோம்: ”வட சென்னை” புது ட்ரெண்ட்
வடசென்னை பாடல் வெளியீட்டு தேதி அறிவிக்கபட்டுள்ளது
Recommended Video

சென்னை: வட சென்னை படத்தின் பாடல் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் வட சென்னை.

இப்படத்தின் டீசர் வெளியாகி பாராட்டுக்களை குவித்த நிலையில், பாடல்கள் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர். சிங்கிள் டிராக் ரிலீஸ் செய்தால் கூட மகிழ்ச்சியடைவார்கள்.
ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் வரும் 23 ஆம் தேதி பாடல்கள் வெளியாக உள்ளது. சிங்கிள் டிராக் மட்டும் வெளியிட்டால், இவ்வளவு நாள் இசைப் பசியோடு காத்திருக்கும் ரசிகர்களுக்கு, ஸ்னாக்ஸ் டிபன் கொடுப்பது போல இருக்கும் என எண்ணியவர்கள், நீங்க வயிறு முட்ட ஃபுல் மீல்ஸ் சாப்பிடுங்கள் என சொல்வதுபோல எல்லா பாடல்களையும் ஒரே நாளில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
தேதி மட்டுமே தற்போது வெளியிட்டுள்ளனர். பாடல் வெளியீட்டு விழா எங்கு நடைபெறப்போகிறது, அல்லது வீட்டிற்குள் உட்கார்ந்து டிஜிட்டல் இந்தியாவை பறைசாற்றும் வகையில் ஆன்லைனில் ரிலீஸ் செய்யப்போகிறார்களா என்பதெல்லாம் படக்குழுவினருக்கே வெளிச்சம்.
கண்டிப்பாக மிகப்பெரிய அளவில் ஆடியோ லாஞ்ச் செய்ய வேண்டும் என ரசிகர்கள் கூக்குரலிட்டு வருகின்றனர். தனுஷ் அதை நிறைவேற்றுவார் என நம்பலாம். ஏனென்றால், இது சந்தோஷ் நாராயணனின் 25 வது படம். மேலும் தனுஷ் நடிகர், தயாரிப்பாளர் பாடகர் என்பதையெல்லாம் தாண்டி இப்படத்தில் இசைக்கலைஞராகவும் மாறியுள்ளார் என சந்தோஷ் நாராயணன் தெரிவித்திருந்தார். எந்தக் கருவியை தனுஷ் வாசித்தார் என்பதை டெமோ காட்டுவதற்காகவாவது நிகழ்ச்சி நடைபெறும் என்கிறார்கள்.
வெற்றிமாறன் இயக்கியுள்ள வட சென்னை திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, கிஷோர், அமீர், டேனியல் பாலாஜி, கருணாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











