என்ன அடுத்த என்ஜாய் எஞ்சாமி ரெடியாகுதா? பாடகி தீ மற்றும் சந்தோஷ் நாராயணன் உடன் வடிவேலு!
சென்னை: பாடகி தீ மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உடன் வைகைப்புயல் வடிவேலு இருக்கும் அட்டகாசமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
லைகா தயாரிப்பில் இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
அந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் தான் இசையமைக்கப் போகிறார் என்கிற தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது வெளியாகி உள்ள புகைப்படங்கள் அதனை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளன.

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்
தடைகள் நீக்கப்பட்ட நிலையில், மீண்டும் சினிமாவில் நாயகனாக நடிக்க ஆரம்பித்துள்ளார் நடிகர் வடிவேலு. நாய் சேகர் டைட்டிலில் சதீஷ் நடித்து வரும் நிலையில், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்கிற டைட்டிலில் வடிவேலு நடிக்கப் போவதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னமும் வெளியாகவில்லை.

சுராஜ் இயக்கத்தில்
மூவேந்தர், குங்குமப் பொட்டு கவுண்டர், மிலிட்டரி, தலைநகரம், மருதமலை, படிக்காதவன், மாப்பிள்ளை, அலெக்ஸ் பாண்டியன், சகலகலா வல்லவன், கத்தி சண்டை உள்ளிட்ட பல காமெடி திரைப்படங்களை இயக்கி உள்ள இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு அடுத்ததாக நடிக்க உள்ளார். சமீபத்தில் இயக்குநருடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடி அதனை உறுதி செய்தார்.

சந்தோஷ் நாராயணன்
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஷ் நாராயணன் தான் வடிவேலுவின் புதிய படத்திற்கு இசையமைக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், அதனை உறுதி செய்யும் விதத்தில் தற்போது புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

என்ஜாய் எஞ்சாமி கூட்டணி
சந்தோஷ் நாராயணன் தயாரிப்பில் பாடகி தீ மற்றும் தெருக்குரல் அறிவு உருவாக்கிய என்ஜாய் எஞ்சாமி பாடல் உலகளவில் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இந்நிலையில், பாடகி தீ மற்றும் சந்தோஷ் நாராயணன் உடன் வடிவேலு இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

ஃபர்ஸ்ட் லுக் எப்போ
நடிகர் சதீஷ் நடிப்பில் உருவாகி வரும் நாய் சேகர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ள நிலையில், வடிவேலுவுக்கு நாய் சேகர் டைட்டில் இல்லை என்பது தெளிவாகி உள்ளது. அதனால், சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் எப்போ வரும் என ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

பிரியா பவானி சங்கரா
சமீபத்தில் வடிவேலுவுடன் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு அந்த லக்கி கேர்ள் நான் தான் என பிரியா பவானி சங்கர் போட்ட பதிவை பார்த்த ரசிகர்கள் வடிவேலுக்கு பிரியா பவானி சங்கர் தான் ஜோடி என கமெண்ட் செய்து வருகின்றனர். விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபர்ஸ்ட் சிங்கிள்
இந்நிலையில், பாடகி தீ, சந்தோஷ் நாராயணன் மற்றும் வடிவேலுவின் சந்திப்பு புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஃபர்ஸ்ட் லுக்குடன் அட்டகாசமான ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலே சந்தோஷ் நாராயணன் இசையில் தீ குரலில் வெளியாகி விடும் போல இருக்கே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

வேற லெவல் ஓப்பனிங்
லைகா தயாரிப்பு என்பதால் படம் பிரம்மாண்டமாகவே இருக்கும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. மேலும், புரமோஷன் உள்ளிட்ட பணிகளும் கலக்கலாக செய்யப்பட்டு வடிவேலுவின் கம்பேக் படத்திற்கு வேற லெவல் ஓப்பனிங் இருக்கும் என்றும் ரசிகர்கள் இப்பவே கெஸ் பண்ண ஆரம்பித்து விட்டனர்.


Click it and Unblock the Notifications











