Don't Miss!
- Automobiles என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
நெஞ்சை தொடும் அம்மா பாடல்...வலிமை செகண்ட் சிங்கிள் வெளியானது
சென்னை : டைரக்டர் ஹச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் வலிமை. போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கும் வலிமை படம் 2022 ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
வலிமை படத்தின் ஃபஸ்ட்லுக், மோஷன் போஸ்டர் ஆகியன ஜுலை மாதம் வெளியிடப்பட்டன. அதைத் தொடர்ந்து ஃபஸ்ட் க்ளிம்ப்ஸ், ஃபஸ்ட் சிங்கிள் ஆகியன வெளியிடப்பட்டன. இவை அனைத்தையும் அஜித் ரசிகர்கள் வேற லெவலில் தாறுமாறாக ஹிட் ஆக்கினர்.
என்ன சொல்றீங்க நடிகர் பிரபாஸுக்கு உடல் நலக் குறைவா? உண்மையை உடைத்து சொன்ன நெருங்கிய நண்பர்!
நாங்க வேற மாரி
ஃபஸ்ட் சிங்கிளான நாங்க வேறமாரி பாடலை டைரக்டர் விக்னேஷ் சிவன் எழுதி இருந்தார். ஒர்க்கிங் வீடியோவுடன் வெளியிடப்பட்ட வேற மாரி பாடல் வேற மாரி ஹிட் அடித்தது. இதைத் தொடர்ந்து செகண்ட் சிங்கிள் எப்போது வரும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர்.
செகண்ட் சிங்கிள் ப்ரோமோ
இந்நிலையில் செகண்ட் சிங்கிளான அம்மா சென்டிமென்ட் பாடல் டிசம்பர் 5 ம் தேதி வெளியிடப்படும் என போனி கபூர் அறிவித்தார். செகண்ட் சிங்கிலுக்கான ப்ரோமோ டிசம்பர் 3 ம் தேதி வெளியிடப்பட்டது. நான் பார்த்த முதல் முகம் நீ...நான் கேட்ட முதல் குரல் நீ என துவங்கும் இந்த அம்மா சென்டிமென்ட் பாடலின் ப்ரோமோவே செக ஹிட்டானது.
அம்மா பாடல்
விக்னேஷ் சிவனின் வரிகளில், சித் ஸ்ரீராம் பாடிய அம்மா பாடல் வலிமை செகண்ட் சிங்கிளாக இன்று வெளியிடப்பட்டது. இந்த பாடலை போனி கபூர் ட்விட்டரில் வெளியிட்ட உடனேயே 16,000 பார்வைகளையும், 19,000 லைக்குகளையும் பெற்று விட்டது. கார்டூன் வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாடல் அஜித்தின் குழந்தை பருவம் தொடங்கி, வளர்ந்து இளைஞராவது வரை காட்டப்படுகிறது.
டிரெண்டிங் ஆன வலிமை
வலிமை படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியீட்டை முன்னிட்டு AjithKumar,Valimai, MotherSong போன்ற ஹாஷ்டேக்குகள் உருவாக்கப்பட்டு, ட்விட்டரில் டிரெண்டிங் ஆக்கப்பட்டுள்ளன. இதில் அஜித் ரசிகர்கள் பாராட்டுக்களை குவித்து வருகிறார்கள். இந்த அம்மா பாடலை வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.
பிளாஷ்டேக் பாடலா
வலிமை படத்தில் அஜித்தின் அம்மாவாக சுமித்ரா நடித்துள்ளார். இந்த அம்மா சென்டிமென்ட் பாடல் பிளாஷ்பேக் காட்சியாக இடம்பெறும் என கூறப்படுகிறது. இதனால் வலிமை படத்தின் மீதான ரசிகர்களின் ஆர்வம் பல மடங்கு அதிகரித்துள்ளது.