மிர்ச்சியில் 'வீரம்' இசை வெளியீடு: பாடல்கள் கலக்கல்ஸ்
சென்னை: வீரம் படத்தின் இசை வெளியீடு விழா இன்று நடந்தது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் குமார், தமன்னா, சந்தானம், விதார்த், பாலா, முனிஷ், சுஹைல், ரமேஷ் கண்ணா, அப்புக்குட்டி உள்ளிட்டோர் நடித்துள்ள வீரம் படத்தின் இசை இன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று காலை வீரம் படத்தின் பாடல்கள் ரேடியோ மிர்ச்சியில் வெளியிடப்பட்டது.

டி.எஸ்.பி.
படத்திற்கு டிஎஸ்பி என்று அழைக்கப்படும் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். படத்தில் மொத்தம் 5 பாடல்கள் உள்ளன.

பாடல்கள் விவரம்
நல்லவனு சொல்லுவாங்க என்ற பாட்டை தேவிஸ்ரீ பிரசாதே பாடியுள்ளார். இவந்தானா என்று துவங்கும் பாடலை சாகர் மற்றும் ஸ்ரேயா கோஷல் பாடியுள்ளனர்.

தங்கமே தங்கமே
தங்கமே தங்கமே என்ற பாடலை அட்னன் சாமி, பிரியதர்ஷினி ஆகியோர் பாடியுள்ளனர். அட்னன் சாமியின் குரல் அஜீத்துக்கு பொருந்தியுள்ளது என்று தேவிஸ்ரீ பிரசாத் தெரிவித்துள்ளார். சிங் சிக்கா சிங் சிக்கா என்ற பாடலை புஷ்பவனம் குப்புசாமி, மகிழினி மணிமாறன் ஆகியோர் பாடியுள்ளனர். வீரம் என துவங்கும் பாடலை ஆனந்த், கவுசிக், தீபக், ஜெகதீஷ் ஆகியோர் பாடியுள்ளனர்.

பாடல்கள் சூப்பர்
வீரம் படத்தின் பாடல்கள் அனைத்தும் நன்றாக உள்ளதாக அஜீத் ரசிகர்கள் தவிர பிறரும் தெரிவித்துள்ளனர். பாடல்கள் எப்படி என்று உங்களின் கருத்துகளை எங்களிடம் பகிர்ந்து கொள்ளுங்களேன்.


Click it and Unblock the Notifications











