அப்போ மாநாடு இல்லையா.. வெங்கட் பிரபுவின் புதிய ட்வீட்டை பார்த்து வயிறு எரியும் சிம்பு ரசிகர்கள்?

சென்னை: சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு மாநாடு படத்தில் நடிப்பார் என்ற செய்தி வெளியான போது சிம்பு ரசிகர்கள், அஜித்துக்கு மங்காத்தா கொடுத்தது போல சிம்புவுக்கு மாநாடு படத்தை கொடுப்பார் வெங்கட் பிரபு என உற்சாகத்தில் இருந்தனர்.

ஆனால், ஷூட்டிங் வராமல் சிம்பு செய்த அலப்பறைகளால், தயாரிப்பு தரப்பு, அவரை மாநாடு படத்தில் இருந்து நீக்கியது.

சில சமரச பேச்சுவார்த்தைகள் நடந்த பிறகு மீண்டும் சிம்பு மாநாடு படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சபரி மலைக்கு மாலை போட்டு, ஆன்மிக சுற்றுலா செல்ல சிம்பு தொடங்கி விட்டார்.

இந்நிலையில், ராகவா லாரன்ஸுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட வெங்கட் பிரபு, விரைவில் அப்டேட் வரும் என குறிப்பிட, அப்போ மாநாடு படம் வராதா என சிம்பு ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

நல்லதே நடக்கும்

பாலிவுட்டில் அக்‌ஷய் குமார், கியாரா அத்வானி நடிப்பில் உருவாகியுள்ள லக்‌ஷ்மி பாம் திரைப்படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், மீண்டும் கோலிவுட்டில் வெங்கட் பிரபு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளார். ராகவா லாரன்ஸ் உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, நல்லதே நினைப்போம், நல்லதே பேசுவோம், நல்லதே நடக்கும் விரைவில் நல்ல அப்டேட் வரும் என வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வெங்கட் பிரபு வேண்டுதல்

வெங்கட் பிரபு வேண்டுதல்

வெங்கட் பிரபு, தான் இயக்கும் படங்களில் தனது டைட்டிலுடன் சிறப்பான அடைமொழி கொடுப்பது வழக்கம். உதாரணத்திற்கு அஜித்தின் மங்காத்தா படத்திற்கு A Venkat Prabhu Game என்று கொடுத்திருந்தார். இந்நிலையில், வெங்கட் பிரபுவின் இந்த ட்வீட்டை பார்த்த இந்த நெட்டிசன் A Venkat Prabhu Venduthal என கலாய்த்துள்ளார்.

அஜித் படம் எப்போ?

லவ் யூ வெங்கட் அண்ணா.. அடுத்து அஜித் சார் கூட எப்போ படம் பண்ணப் போறீங்க ஆவலோடு காத்திருக்கிறேன் என இந்த அன்பான அஜித் ரசிகர் மங்காத்தா 2வுக்கு அடி போடுகிறார்.

மாநாடு என்னாச்சு?

ராகவா லாரன்ஸுடன் அடுத்த படத்துக்கு வெங்கட் பிரபு ரெடியாகி விட்டார் என்று அறிந்த இந்த சிம்பு ரசிகர், மாநாடு என்னாச்சு பிரதர் என கேட்டுள்ளார்.

அப்போது மாநாடு?

சிம்புவின் மாநாடு படத்திற்காக காத்திருந்த இந்த ரசிகரும், அப்போது மாநாடு? என்ன ஆச்சுன்னு தூய தமிழ்ல கேட்டுருக்காரு, இவங்க கேள்விக்கெல்லாம் சீக்கிரம் வெங்கட் பிரபு பதில் சொல்லுவாருன்னு எதிர்பார்க்கலாம்.

மங்காத்தா 2 எப்போ?

வெங்கட் பிரபு ட்வீட்டுக்கு கீழே ராகவா லாரன்ஸ் ரசிகர்களை அதிகம் காணவில்லை. சிம்பு ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் மொய்த்துக் கொண்டு மாநாடு எப்போ வரும் மங்காத்தா 2 அப்டேட் எங்கே? என கேட்டு வருகின்றனர். இந்த ரசிகரும் அதே கேள்வியைத்தான் கேட்டுள்ளார்.

ரங்கஸ்த்தலம் ரீமேக்கா?

ரங்கஸ்த்தலம் ரீமேக்கா?

தெலுங்கில் ராம் சரண், சமந்தா நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த ரங்கஸ்த்தலம் படத்தின் ரீமேக்கில் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளார் என்ற தகவல் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. வெங்கட் பிரபுவுடன் தற்போது ராகவா லாரன்ஸ் இணைந்துள்ள நிலையில், அது ரங்கஸ்த்தலம் ரீமேக்கா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெங்கட் பிரபு வெளியிடவுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X