வாடிவாசல் வேலையை ஆரம்பித்த வெற்றிமாறன்.. யாருகூட உட்கார்ந்து இருக்காருன்னு பாருங்க!
சென்னை: கங்குவா படத்துக்கு முன்னதாகவே வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தின் அறிவிப்பு வெளியானது. ஆனால், ஒரு பக்கம் வெற்றிமாறன் விடுதலை 1 மற்றும் 2 பாகங்களில் பிசியாகி விட்டார். இன்னொரு பக்கம் சூர்யா மும்பையில் குடியேறிய நிலையில் கங்குவா, ரெட்ரோ மற்றும் சூர்யா 45 என பல படங்களில் அடுத்தடுத்து பிசியாகிவிட்டார்.
விடுதலை 2 படத்திற்கு பிறகு வெற்றிமாறன் தனது அடுத்த படமாக வாடிவாசல் படத்தைத் தான் கையிலெடுத்துள்ளார். சூர்யா 45 படத்தை முடித்துவிட்டு சூர்யாவும் கூடிய சீக்கிரமே வாடிவாசல் படத்தில் நடிக்க வந்துவிடுவார் என தெரிகிறது.

கலைப்புலி எஸ். தாணு வாடிவாசல் படத்தை மலைபோல நம்பியிருக்கும் நிலையில், சூர்யாவுக்கும் மிகப்பெரிய வெற்றிப் படமாக வாடிவாசல் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த படத்திற்கான வேலையை தற்போது வெற்றிமாறன் ஆரம்பித்துள்ள அட்டகாசமான புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.
வாடிவாசல்: ஜல்லிக்கட்டுக்காக சென்னை மெரினாவில் மிகப்பெரிய புரட்சி வெடித்தது எல்லாம் மறக்கவே முடியாது. ஆண்டுதோறும் மீண்டும் தமிழ்நாடு முழுவதும் அலங்காநல்லூர், பாலமேடு என பல ஊர்களில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகின்றன. ஜல்லிக்கட்டு காளை கட்டவிழ்த்து விடப்படும் இடத்திற்கு பெயர் தான் வாடிவாசல். சி.சு. செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலை படமாக்கும் உரிமையை பெற்றுள்ள வெற்றிமாறன் அதே பெயரில் அந்த படத்தை இயக்கப் போகிறார்.
ஜி.வி. பிரகாஷுடன் வெற்றிமாறன்: வாடிவாசல் படம் கடந்த சில ஆண்டுகளாகவே தாமதமாகி வந்த நிலையில், விடுதலை 2 படத்திற்கு பிறகு வெற்றிமாறன் இந்த படத்தை எடுத்து முடித்து விட வேண்டும் என்கிற முனைப்புடன் வேலைகளை ஆரம்பித்துவிட்டார். முதல் கட்டமாக ஜி.வி. பிரகாஷ் குமாருடன் இணைந்து படத்திற்கு தேவையான பாடல்களை உருவாக்கும் பணிகளை இன்று தொடங்கியுள்ளார். இருவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள ஜி.வி. பிரகாஷ் குமார் வாடிவாசல் படத்தின் கம்போஸிங் பணிகள் தொடங்கி விட்டன என சூப்பரான அப்டேட்டை கொடுத்து சூர்யா ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளார்.
கிங்ஸ்டன் படம் ரிலீஸ்: ஜி.வி. பிரகாஷ் ஹீரோவாக நடித்துள்ள கிங்ஸ்டன் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகும் நிலையில், அந்த படத்தை பார்க்க தியேட்டருக்கு கூடச் செல்லாமல் ஜி.வி. பிரகாஷ் வாடிவாசல் படத்தின் இசை பணிகளில் தீவிரமாக இறங்கிவிட்டாரே என அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். குட் பேட் அக்லி, இட்லி கடை என அடுத்தடுத்து வெளியாக காத்திருக்கும் படங்களுக்கும் ஜி.வி. பிரகாஷ் குமார் தான் இசை என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த பெரிய சம்பவம்: கங்குவா படம் சூர்யாவுக்கு மிகப்பெரிய தோல்விப் படமாக மாறியதும் ஏகப்பட்ட ட்ரோல்கள் அவரை சுற்றி கிளம்பின. ஆனால், அவற்றுக்கு எல்லாம் பதிலடி கொடுக்க ரெட்ரோ, சூர்யா 45 மற்றும் வாடிவாசல் என பெரிய பெரிய சம்பவங்களாக இறக்கப் போகிறார் சூர்யா என்று அவரது ரசிகர்கள் சோஷியல் மீடியாவை தெறிக்கவிட்டு வருகின்றனர். கண்டிப்பாக இந்த 3 படங்களும் சூர்யாவுக்கு பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய இடத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications