விடுதலை ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்.. இளையராஜா இசையில், தனுஷ் குரலில் ’ஒன்னோட நடந்தா’ எப்படி இருக்கு?
சென்னை: இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய்சேதுபதி நடிப்பில் இரு பாகங்களாக விடுதலை திரைப்படம் உருவாகி வருகிறது. படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், விரைவில் முதல் பாகத்தை ரிலீஸ் செய்யும் வேலைகளை வெற்றிமாறன் ஆரம்பித்துள்ளார்.
இந்நிலையில், இளையராஜா இசையில் நடிகர் தனுஷ் பாடிய விடுதலை படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான "ஒன்னோட நடந்தா" பாடல் தற்போது வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த பாடலை வெளியிட்டுள்ளார்.
காதல் தாலாட்டுப் பாடலாக உருவாகி உள்ள இந்த பாடல் ரசிகர்களை கேட்டதும் பிடிக்கும் ரகத்தில் உள்ளது என ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

சூரி ஹீரோவாக
பரோட்டா சூரியாக வெண்ணிலா கபடி குழு படத்தில் அறிமுகமான சூரி, நடிகர் சிவகார்த்திகேயன் உடன் ஏகப்பட்ட படங்களில் இணைந்து காமெடியில் கலக்கி தமிழ் சினிமா ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார். முதன்முறையாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஹீரோவாக நடித்துள்ள சூரியின் விடுதலை படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது.

ஜிவி பிரகாஷ் தங்கை
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாரின் தங்கையான பவானி ஸ்ரீ தான் இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்துள்ளார். விஜய்சேதுபதியின் க/பெ. ரணசிங்கம் படத்தில் தங்கையாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பவானி ஸ்ரீ என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சில படங்களிலும் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

விடுதலை முதல் பாகம்
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் விடுதலை படம் உருவாகி வந்த நிலையில், அந்த படத்தில் விஜய்சேதுபதி கேமியோவாக இணைந்தார். பின்னர் அவரது கதாபாத்திரத்திற்காகவே 2வது பாகமே உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. முதல் பாகத்தில் சூரி ஹீரோவாகவும் இரண்டாம் பாகத்தில் விஜய்சேதுபதி ஹீரோவாகவும் இந்த விடுதலை உருவாகி வருவதாக கூறுகின்றனர். சூரி, விஜய்சேதுபதி, கெளதம் மேனன், ராஜீவ் மேனன், இளவரசு, சேத்தன், பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

ராசாவே உன்னால ஆகாசம் விடியும்
இயக்குநர் வெற்றிமாறன் ஜிவி பிரகாஷ் உடன் கூட்டணி அமைத்து வந்த நிலையில், இந்த முறை இளையராஜாவுடன் கூட்டணி அமைத்துள்ளார். இளையராஜா இசையில் உருவாகி உள்ள முதல் பாடலான "ஒன்னோட நடந்தா" பாடல் வெளியாகி உள்ளது. பாடலில் இடம்பெற்றுள்ள ராசாவே உன்னால ஆகாசம் விடியும் வரிகள் இளையராஜாவை குறிப்பதகாவே இடம்பெற்றுள்ளது.

தனுஷ் இல்லாமலா
வெற்றிமாறன் படம் என்றாலே தனுஷின் பங்கு அதிகம் இருக்கத்தான் செய்யும். இந்த படத்தில் அவர் நாயகனாக நடிக்கவில்லையே என ஏங்கிய ரசிகர்களுக்கு முதல் பாடலே என் குரலில் தான் என இளையராஜா இசையில் பாடி அசத்தி உள்ளார் தனுஷ். வாடிவாசல் படத்திலும் அப்போ தனுஷின் பாடல் இடம்பெறுமா என்கிற கேள்விகள் கிளம்பி உள்ளன.


Click it and Unblock the Notifications











