எனக்கு எல்லாமே என் மனைவிதான்! - விஜய் ஆன்டனி

By Shankar

எனக்கு எல்லாமே என் மனைவிதான். அவர்தான் என் வெற்றிக்குக் காரணம் என்றார் இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆன்டனி.

முன்னணி இசையமைப்பாளரான விஜய் ஆன்டனி, 'நான்' படத்தில் நாயகனாக நடித்தார். அந்தப் படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அடுத்தடுத்து ஹீரோவாக நடிக்க வாய்ப்புகள் வந்தன.

ஆனாலும் தன் சொந்தத் தயாரிப்பிலேயே அடுத்து நடிக்கிறார் விஜய் ஆன்டனி. படத்துக்கு தலைப்பு சலீம்.

Vijay Antony talks about his wife

இதில் அவருக்கு ஜோடியாக அக்ஷா பர்தஷ்னி நடிக்கிறார். என்.வி.நிர்மல் இயக்குகிறார். இப்படத்திற்கு விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் சினிமாஸில் நடைபெற்றது.

இயக்குனர்கள் பாரதிராஜா, பாலா, பார்த்திபன், ஜெயம் ராஜா, நடிகர் ஷாம் உள்பட பலரும் விழாவுக்கு வந்திருந்தனர். படத்தின் ஆடியோ சிடியை கேயார் முன்னிலையில் இயக்குனர் பாரதிராஜா வெளியிட, இயக்குனர் பாலா பெற்றுக்கொண்டார்.

இசை வெளியீடு முடிந்ததும், விஜய் ஆன்டனி பேசுகையில், "சலீம் படத்தை ரம்ஜான் ஸ்பெஷலாக வெளியிடவிருக்கிறோம். என்னுடைய மனைவிதான் எனக்கு எல்லாமே.

என்னுடைய ஒவ்வொரு வெற்றிக்கு பின்னாலும் என்னுடைய மனைவிதான் இருக்கிறார். இந்தப் படத்தின் கதை ரொம்பப் பிடித்திருந்தது. என் மனைவிதான் கதையைத் தேர்வு செய்தார்", என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X