டிசம்பர் 15- விஜய்யின் ஜில்லா இசை வெளியீடு!!

By Shankar

சென்னை: பொங்கலுக்கு ஜில்லா ரிலீஸ் என்பதில் உறுதியாக இருக்கிறார் விஜய். எனவே படத்தின் இசை வெளியீட்டை வரும் டிசம்பர் 15-ம் தேதி நடத்துவதாக தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.

நேசன் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால் நடித்துள்ள புதிய படம் 'ஜில்லா'. விஜய்யுடன் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், பூர்ணிமா பாக்யராஜ், மஹத் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.சவுத்ரி தயாரித்துள்ளார்.

அரசியல் இல்லை

அரசியல் இல்லை

அரசியலோ பஞ்ச் வசனங்களோ இல்லாமல், கதைக்கான நடிப்பை மட்டுமே தந்துள்ளாராம் இந்தப் படத்தில் விஜய். அரசியல் சார்ந்த ஒரு சில வசனக் காட்சிகளையும் ஆர் பி சவுத்ரி சொன்னதால் நீ்க்கிவிட்டாராம் இயக்குநர்.

பொங்கலுக்கு

பொங்கலுக்கு

பொங்கலுக்கு இப்படத்தை வெளியிட முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். சமீப தினங்களாக படத்துக்கு தியேட்டர் முன்பதிவு செய்வதில் விஜய் மற்றும் அவரது தயாரிப்பாளர் படுபிஸியாக உள்ளனர்.

டிசம்பர் 15-ல்

டிசம்பர் 15-ல்

ஜில்லாவின் பொங்கல் ரிலீசை உறுதிப்படுத்தும் வகையில், டி.இமான் இசையில் அமைந்துள்ள இப்படத்தின் பாடல்களை வரும் டிசம்பர் 15-ந் தேதி வெளியிடப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். எங்கு நடக்கும் என்பதை இன்னும் இரண்டு நாட்களில் அறிவிக்கப் போவதாக தெரிவித்துள்ளனர். அன்றைய தினமே ஜில்லா படத்தின் டிரைலரும் வெளியிடப்படுகிறது.

கடும் போட்டி

கடும் போட்டி

ஏற்கெனவே, பொங்கலுக்கு ரஜினியின் ‘கோச்சடையான்', அஜீத்தின் ‘வீரம்' ஆகிய படங்கள் வெளியாவது உறுதியாகியுள்ள நிலையில், விஜய்யின் ‘ஜில்லா' பொங்கலுக்கு இவர்களுடன் போட்டி போடுமா? என்ற கேள்வி இருந்தது. அந்தக் கேள்விக்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது ஜில்லா இசை வெளியீடு அறிவிப்பு.

More from Filmibeat

Read more about: jilla audio விஜய் vijay
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X