சுனைனாவுக்கு டிப்ஸ் கொடுத்த விஜய் சேதுபதி- கிருஷ்ணா
விஜய் சேதுபதி, கிருஷ்ணா இணைந்து நடிக்கும் ‘வன்மம்'படத்தின் பாடல் வெளியீட்டு விழா சூரியன் எப்.எம்மில் சமீபத்தில் நடைபெற்றது.
இதில் நடிகர்கள் விஜய் சேதுபதி, கிருஷ்ணா, போஸ் வெங்கட், மதுசூதன்ராவ், சுப்பிரமணியபுரம் ராஜா, நடிகைகள் சுனைனா, ஸ்ரீரஞ்சனி, ராதா மணி, வினோதினி, இசையமைப்பாளர் தமன், , கவிஞர் யுகபாரதி, இயக்குநர் ஜெய்கிருஷ்ணா ஆகியோர் பங்கேற்றனர்.

நான் நடித்த நடிகர்கள்
‘வன்மம்'படத்தின் இயக்குநர் ஜெய் கிருஷ்ணா பேசும் போது"என் 25 ஆண்டுகால போராட்டத்துக்குப்பின் இயக்குநராகியிருக்கிறேன். இந்தக் கதையை நான் தயாரிப்பாளரிடம் கூறியபோது நான் நினைத்த நடிகர்கள் விஜய்சேதுபதியையும் கிருஷ்ணாவையும் அவரும் கூறியது எனக்கு ஆச்சரியம் என்றார்.

அழ வைத்துவிட்டனர்
படத்தில் பணியாற்றிய நடிகர்கள் தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவருமே இவன் ரொம்பநாள் கழிச்சு படம் பண்றான் நன்றாக வரட்டும் இவனை கைவிடக் கூடாது என்று,என்கிற நல்ல எண்ணத்துடன் தங்கள் சொந்தப் படம் போல ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அவர்களின் ஒத்துழைப்பை எண்ணி நான் அழுதிருக்கிறேன்.

அசந்த நாயகர்கள்
படத்தில் நடித்த நாயகர்கள் விஜய்சேதுபதியும் கிருஷ்ணாவும் தாங்கள் இவரை பழைய ஆள் கதை எப்படி இருக்குமோ என்று பயந்ததாகவும் கதையைக் கேட்டு அசந்துவிட்டதாகவும் கூறினார்கள்.

போட்டி போட்டு நடித்தேன்
‘வன்மம்‘ படத்தில் விஜய் சேதுபதி-கிருஷ்ணாவுடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த படத்தில் நடித்துள்ள விஜயசேதுபதி- கிருஷ்ணா இருவருமே போட்டி போட்டு நடித்தனர். அதைப்பார்த்து, எனக்கு இன்னும் சிறப்பாக நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டு, முந்தைய படங்களை விட இந்த படத்தில் நடிப்பில் கூடுதல் ஸ்கோர் பண்ணினேன்.

டிப்ஸ் கொடுத்த ஹீரோக்கள்
அதற்கு விஜயசேதுபதி- கிருஷ்ணா இருவருமே எனக்கு உறுதுணையாக இருந்தனர். சில காட்சிகளில் நடிக்கிறபோது அவர்கள் சார்பில இருந்தும் எனக்கு டிப்ஸ் கொடுத்தார்கள். அது எனக்கு பெரிய உதவியாக இருந்தது என்கிறார் சுனைனா.

சுனைனா எதிர்பார்ப்பு
வன்மம் படத்தில் விஜய்சேதுபதி-கிருஷ்ணா இருவருக்கும் அறிமுக பாடல் ஒன்று வரும். அது எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று கூறினார் காதலில் விழுந்தேன்', ‘சமர்', ‘நீர்ப்பறவை' ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்த சுனைனா, தற்போது ‘வன்மம்' படத்தில் நடிக்கிறார். இதை அதிகம் எதிர்பார்க்கிறாராம் சுனைனா.

சூப்பர் கெமிஸ்ட்ரி
படம் பற்றி பேசிய விஜய் சேதுபதி, படத்தின் கதையை கேட்டதும் இன்னொரு கேரக்டரில் யார் நடிக்கிறார் என்று கேட்டேன். கிருஷ்ணா என்று சொன்னார்கள். அவர் எப்படிப் பழகுவாரோ என்று நினைத்தேன். ஆனால், ஸ்பாட்டில் எங்களுக்கு இடையே அற்புதமான கெமிஸ்ட்ரி இருந்தது.

நடனமாட கஷ்டப்பட்டேன்
பொதுவாக ஹீரோ, ஹீரோயினுக்குத்தான் இப்படி சொல்வது உண்டு. ஆனால்,நாங்கள் ஒவ்வொரு காட்சியிலும் போட்டிப் போட்டு நடித்துள்ளோம். கிருஷ்ணாவுக்கு சுனைனா ஜோடி. கதைப்படி எனக்கு ஜோடி கிடையாது. பாடல் காட்சிகளில் நடனமாடுவதற்கு கஷ்டப்பட்டேன். என்றார்.

சமமான முக்கியத்துவம்
கிருஷ்ணா பேசும்போது, ‘அருமையான கதையை கொண்ட படம் இது. எனக்கும் விஜய் சேதுபதிக்கும் சமமான முக்கியத்துவம் படத்தில் இருக்கிறது' என்றார்.


Click it and Unblock the Notifications











