நவரசாவில் விஜய் சேதுபதியின் எதிரி படம்... சினிமா அனுபவத்தை தரும் யாதோ பாடல்

சென்னை : நவரசா ஆந்தாலஜியில் 9 டைரக்டர்கள் இணைந்து 9 படங்களை இயக்கியுள்ளனர்.

வரும் ஆகஸ்ட் 6ம் தேதி நெட்பிளிக்சில் வெளியாக உள்ள இந்த ஆந்தாலஜியில் விஜய் சேதுபதி, சூர்யா, சித்தார்த், பாபி சிம்ஹா உள்ளிட்ட முன்னணி ஹீரோக்கள் நடித்துள்ளனர்.

இந்நிலையில் விஜய் சேதுபதி நடித்துள்ள எதிரி படத்தின் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 6ல் ரிலீஸ்

ஆகஸ்ட் 6ல் ரிலீஸ்

கோலிவுட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் நலனை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள நவரசா ஆந்தாலஜி வரும் ஆகஸ்ட் 6ம் தேதி நெட்பிளிக்சில் வெளியாக உள்ளது. டைரக்டர் மணிரத்னம் தனது நண்பர் ஜெயேந்திராவுடன் இணைந்து நவரசா உருவாக்கத்தில் தன்னை ஈடுபடுத்தியுள்ளார்.

9 படங்கள்

9 படங்கள்

9 இயக்குநர்களின் கைவண்ணத்தில் முன்னணி நடிகர்கள் சூர்யா, விஜய் சேதுபதி, சித்தார்த், அதர்வா, பாபி சிம்ஹா உள்ளிட்டவர்கள் நடிப்பில் 9 கதைகள் உருவாக்கப்பட்டுள்ளது. கோபம், பயம், ஆச்சர்யம், அழுகை என 9 ரசங்களை மையமாக கொண்டு கதைகள் உருவாக்கப்பட்டுள்ளதால் நவரசா.

அடுத்தடுத்த பாடல்கள்

அடுத்தடுத்த பாடல்கள்

வரும் மாதம் 6ம் தேதி நவரசா வெளியாகவுள்ள நிலையில் முன்னதாக பிரமோஷன் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. சூர்யா மற்றும் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள கிடார் கம்பி மேலே நின்று மற்றும் துணிந்தபின் ஆகிய படங்களின் பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

யாதோ பாடல் வெளியீடு

இந்நிலையில் நேற்று மாலை பிஜோய் நம்பியார் இயக்கத்தில் உருவாகியுள்ள எதிரி படத்தின் யாதோ என்ற பாடலை விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். விஜய் சேதுபதி, ரேவதி, பிரகாஷ்ராஜ் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையில் மதன் கார்க்கி வரிகளில் பாடலை பாடியுள்ளார் சின்மயி. மனதை மயக்குகிறது இந்த பாடல்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X