கவிதையாய் மலர்ந்த உறவு... முகிழ் படத்தோட வீடியோ பாடல் வெளியாகியிருக்கு!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதி, ரெஜினா கசான்ட்ரா மற்றும் ஸ்ரீஜா விஜய்சேதுபதி இணைந்து நடித்துள்ள படம் முகிழ்.

தனது மகளுடன் விஜய் சேதுபதி நடித்துள்ள இந்தப் படம் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில் படத்தில் மாயக்காரா வீடியோ பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

முகிழ் படம்

முகிழ் படம்

நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய மகள் மற்றும் ரெஜினா கசான்ட்ராவுடன் இணைந்து நடித்துள்ள படம் முகிழ். சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. விஜய் சேதுபதி வழக்கம்போல பாசக்கார தந்தையாக மிளிர்ந்துள்ளார்.

விஜய் சேதுபதி மகள்

விஜய் சேதுபதி மகள்

படத்தில் அதிகமாக நடிப்பதற்கு வாய்ப்பிருந்தும் முதல் படம் என்பதால் அதை தவறவிட்டுள்ளார் ஸ்ரீஜா விஜய்சேதுபதி. குறிப்பிட்ட சில கதாபாத்திரங்களை மட்டுமே வைத்துக் கொண்டு இயக்குநர் கார்த்திக் சுவாமிநாதன் படத்தில் ஸ்கோர் செய்கிறார். ஆயினும் சில காட்சிகள் அலுப்பு தட்டுவதை தவிர்க்க முடியவில்லை.

கவனம் ஈர்க்கும் ரெஜினா

கவனம் ஈர்க்கும் ரெஜினா

படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பால் ரெஜினா கசான்ட்ரா கவனம் ஈர்க்கிறார். ஒரு தாய்க்கே உரிய தவிப்பை அவர் படத்தில் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். கவர்ச்சி நாயகியாக வலம்வந்த அவருடைய சினிமா கேரியரில் இந்தப் படம் கண்டிப்பாக சிறப்பானதாக அமைந்துள்ளது.

பாசமான நாய்க்குட்டி

பாசமான நாய்க்குட்டி

செல்லப் பிராணி மீதான மகளின் அச்சத்தை போக்குவதற்காக நாய்க்குட்டியை வீட்டிற்கு விஜய் சேதுபதி வாங்கி வர, அவரது அச்சம் களைகிறது. ஆனால் அந்த நாய்க்கு ஏற்படும் அசம்பாவிதத்தால் அவருக்கு ஏற்படும் பாதிப்பை மையமாக கொண்டு படம் வெளிவந்துள்ளது.

கவனம் ஈர்க்கும் இசை

கவனம் ஈர்க்கும் இசை

படத்தில் பெரும்பாலும் ஒரே வீட்டிற்குள் அதிகமான காட்சிகள் இருப்பது ரசிகர்களுக்கு அலுப்பை தட்டினாலும் படத்தின் பெண் இசையமைப்பாளர் ரேவா தன்னுடைய இசையால் சிறப்பாக காட்சிகள் நகர துணை செய்கிறார். அவரது இசையில் மாயக்காரா பாடல் நன்றாக வந்துள்ளது.

வீடியோ பாடல் வெளியீடு

ரிலீசுககு முன்னதாக மாயக்காரா பாடலின் லிரிக் வீடியோ வெளியான நிலையில் தற்போது பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. பாடலின் காட்சிகள் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது. நாய்க்குட்டி மற்றும் அதன் அன்பை உணர்ந்தவர்களுக்குத்தான் இந்த காட்சிகளின் சிறப்பு விளங்கவரும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X