சப்ப மூஞ்சி ஹீரோவா? விமர்சனத்தை தவிடுபொடியாக்கிய KPY பாலா.. ஹீரோவாக நடிக்கும் படத்தின் டைட்டில்!
சென்னை: ஆதிமூலம் கிரியேஷன்ஸ் முதல் தயாரிப்பில் KPY பாலா கதாநாயகனாக அறிமுகம் திரைப்படத்தின் பெயரை, பாலாவின் பிறந்த நாளான இன்று படக்குழு வீடியோ மூலம் வெளியிட்டுள்ளது. இயக்குநர் ஷெரீஃபின் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் பாலா, பாலாஜி சக்திவேல், அர்ச்சனா, நமிதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடித்து வருகின்றனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலா. அதன் பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வெட்டுக்கிளி என்று சொல்லும் போது, சிரிக்காதவர்களே இருக்க முடியாது. ஆரம்பத்தில் சின்ன சின்ன காமெடியில் வந்து கலக்கிய பாலாவிற்கு, குக் வித் கோமாளி நிகழ்ச்சி திருப்பு முனையாக அமைந்தது. அந்த நிகழ்ச்சிக்கு பின் விஜய் சேதுபதியின் புலிக்குட்டி பாண்டி, விமர்சகரான ப்ளூ சட்டை மாறனின் ஆண்டி இந்தியன், நாய் சேகர், போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

KPY பாலா: திரைப்படங்களில் இவரால் பெரிதாக பிரகாசிக்க முடியாத போதும், பலருக்கு இவர் செய்த உதவி இவரை வான் அளவிற்கு உயர்த்திவிட்டது என்று சொல்லலாம். பெரிய நடிகர்களே உதவி செய்ய தயங்கும் போது, சொற்ப சம்பளம் வாங்கும் இவர், உதவி என கேட்டுவிட்டால், அவர்களுக்கு தேடி சென்று உதவி செய்து வருகிறார். கடந்த ஆண்டு இவர்,
கழிப்பறை இன்றி தவித்த மாணவர்களுக்காக 15 லட்சம் ரூபாய் செலவில், நடிகர் ராகவா லாரன்சுடன் இணைந்து கழிப்பறை கட்டிக்கொடுத்தார். தற்போது இருவரும் சேர்ந்து பல உதவிகளை செய்து வருகின்றனர்.
காந்தி கண்ணாடி: இந்நிலையில், கேபிஒய் பாலாவின் பிறந்த நாளை முன்னிட்டு, அவர் ஹீரோவாக நடிக்கும் படத்தின் டைட்டில் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்திற்கு 'காந்தி கண்ணாடி' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதில், தீ பந்தத்துடன் பாலா நிற்கு நரம்பு மாதிரி இருப்பன் எல்லாம் ஹீரோவா, சப்ப மூஞ்சி, ஹீரோவாதற்கு எல்லாம் ஒரு தகுதி வேண்டாமா? என பலர் பேச, மாஸாக என்ட்ரி கொடுத்த பாலா என் முதுக்கு பின்னாடி பேசுவதை பற்றி எனக்கு கவலை இல்லை என ஹீரோவாக என்ட்ரியாகி இருக்கிறார். ஆதிமூலம் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை 'ரணம் அறம் தவறேல்' படத்தை இயக்கிய ஷெரீஃப் இயக்க உள்ளார்உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் இந்த திரைப்படம் ஒரு பீல் குட் திரைப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படம் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











