தெறிக்கவிட்ட மகான் படத்தின் 2வது பாடல்... சில மணிநேரங்களில் அதிகமான வியூஸ்... சூப்பரப்பு

சென்னை : நடிகர் விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள படம் மகான்.

இந்தப் படம் வரும் பிப்ரவரி 10ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது.

தற்போது இந்தப் படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

மகான் படம்

மகான் படம்

நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் முதல் முறையாக இணைந்து நடித்துள்ள படம் மகான். இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். கேங்ஸ்டர் படமாகவும் ஆக்ஷன் த்ரில்லர் படமாகவும் இந்தப் படம் உருவாகியுள்ளது. படத்தில் விக்ரமுடன் முதல்முறையாக சிம்ரன் இணைந்துள்ளார்.

சிம்ஹாவின் புதிய லுக்

சிம்ஹாவின் புதிய லுக்

மேலும் படத்தில் பிரியா பவானி சங்கர், சிம்ஹா உள்ளிட்டவர்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முன்னதாக விக்ரம், துருவ் விக்ரம் ஆகியோரின் போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், இரு தினங்களுக்கு முன்பு சிம்ஹாவின் லுக்கை கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டிருந்தார்.

மிரட்டலான கெட்டப்

மிரட்டலான கெட்டப்

அந்தப் போஸ்டரில் சிம்ஹா வித்தியாசமான கெட்டப்பில் மிரட்டலாக காணப்பட்டார். படம் வரும் பிப்ரவரி 10ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் சிம்ரனின் லுக்கும் வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் பிரமோஷன் பணிகளில் படக்குழு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

இரண்டாவது சிங்கிள் வெளியீடு

இரண்டாவது சிங்கிள் வெளியீடு

முன்னதாக நேற்றைய தினம் படத்தின் இரண்டாவது சிங்கிளை படக்குழு வெளியிட்டிருந்தது. எவன்டா எனக்கு கஸ்டடி என்று துவங்கும் இந்தப் பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். மேலும் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மேலும் இந்தப் பாடலை அவரே பாடியுள்ளார்.

வரவேற்பை பெற்ற பாடல்

வரவேற்பை பெற்ற பாடல்

முன்னதாக கடந்த ஆண்டிலேயே படத்தின் முதல் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் இந்தப் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. பாடல் தமிழில் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், கன்னடத்திலும் வெளியாகியுள்ளது.

கானா பாடல்

கானா பாடல்

கானா பாடலாக வெளியாகியுள்ள இந்தப் பாடல் வெளியான சில மணிநேரங்களிலேயே 13 லட்சம் வியூஸ்களை பெற்றுள்ளது. மேலும் ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பையும் இந்தப் பாடல், படத்திற்கு ஏற்படுத்தியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் முந்தைய படமான ஜகமே தந்திரம் படமும் ஓடிடியில் நேரடியாக ரிலீசான நிலையில் தற்போது இந்தப் படமும் ஓடிடியில் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X