நாசா விஞ்ஞானி நாயகனாக அறிமுகமாகும் படம் ‘விஞ்ஞானி’... ஜோடி மீரா ஜாஸ்மின்!

சென்னை: அமெரிக்க விண்வெளி ஆய்வு மையத்தில் சிலகாலம் விஞ்ஞானியாக பணியாற்றிய பார்த்தி, தமிழில் நாயகனாக அறிமுகமாகும் படம் தான் ‘விஞ்ஞானி'. நாயகனாக நடிப்பதுடன், பார்த்தியே இப்படத்தை தயாரித்தும், இயக்கியும் உள்ளார்.

இளம் விஞ்ஞானி ஒருவரின் வாழ்க்கையில் திருமணத்தால் ஏற்படும் இடையூறுகளைக் கதைக்களமாகக் கொண்டது இப்படம். திருமணத்திற்குப் பின் மீண்டும் மீரா ஜாஸ்மின் நடிப்பில் வெளியாகும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. இந்த விழாவில் பார்த்தி, சஞ்சனா சிங் மற்றும் விஞ்ஞானி படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

Vingyani Audio Launch

நாசா விஞ்ஞானி...

சேலத்தை சொந்த ஊராகக் கொண்ட பார்த்தி, அறிவியல் மீது கொண்ட தீரா ஆர்வத்தால் விண்வெளித் துறையில் டாக்டர் பட்டம் பெற்றவர். பின்னர் சிலகாலம், சர்வதேச புகழ்பெற்ற அமெரிக்காவின் நாசா (NASA) விண்வெளி ஆய்வு மையத்தில் பணியாற்றியுள்ளார்.

ஆராய்ச்சி...

நாசாவில் பார்த்தியும் அவரது குழு உறுப்பினர்களும் ஓசோன் படலம், பருவ நிலை மாற்றம் போன்றவை குறித்து தீவிர ஆய்வு மேற்கொண்டதோடு, புற விண்வெளியில் உயிரினம் வாழ்வது தொடர்பான கண்டுபிடிப்பிலும் இறங்கினர்.

கலைத் தாகம்...

இந்தியாவுக்கு திரும்பிய பின்னர், பார்த்தி,பயோடெக்னாலஜி ஆய்வுத் துறையில் வர்த்தக ஆலோசகராக செயல்பட்டார். பின்னர், பார்த்தியின் ஆர்வம் சினிமா மீது திரும்ப, இதோ நாயகனாக அறிமுகமாகிறார்.

விஞ்ஞானக் கதை...

அமெரிக்காவில் ஜூம்பா நடனம் கற்றுக்கொண்டவரான பார்த்தி, சிறுவயது முதலே நாடகங்களிலும் நடித்துள்ளாராம். தனது முதல்படத்தையே விஞ்ஞானக் கதையாகத் தேர்வு செய்துள்ளார்.

திடீர் திருமணம்...

உலகின் முக்கியமான பிரச்சினை ஒன்றிற்கு தீர்வு காண்பதற்காகப் போராடிக் கொண்டிருக்கும் விஞ்ஞானி எதிர்பாராத விதமாக திருமணப் பந்தத்தில் சிக்கிக் கொள்கிறார். இதனால் அவரது ஆராய்ச்சியில் அவர் சந்திக்கும் பிரச்சினைகள் தான் இப்படத்தின் கதைக்களமாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X