'எங்க வீட்டு மாப்பிள்ளை' அடுத்த சீசன்ல நானா? - நடிகர் விஷால் பதில்

By Vignesh Selvaraj

Recommended Video

ஸ்ட்ரைக், வரலக்ஷ்மி, ஆர்யாவை பற்றி பேசிய விஷால்

சென்னை : கார்த்திக், கௌதம் கார்த்திக் முதன்முறையாக இணைந்து நடிக்கும் 'மிஸ்டர் சந்திரமௌலி' படத்தை திரு இயக்கியிருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது.

விஷால் நடிப்பில் 'நான் சிகப்பு மனிதன்' படத்துக்குப் பிறகு திரு இயக்கியிருக்கும் 'மிஸ்டர் சந்திரமௌலி' படத்தில் கார்த்திக், கௌதம் கார்த்திக், ரெஜினா, வரலட்சுமி, இயக்குநர் மகேந்திரன், இயக்குநர் அகத்தியன், சந்தோஷ், சதீஷ், ஜெகன், விஜி சந்திரசேகர், 'மைம்' கோபி ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இன்று நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் கலந்துகொண்டு பேசினார்.

எங்க வீட்டு மாப்பிள்ளை

எங்க வீட்டு மாப்பிள்ளை

அப்போது பேசிய விஷால், "ஆர்யா 'எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சியில் கலந்துக்கிட்டதை பத்தி கார்த்திக் சார் கேட்டார். இங்க ஃப்ரீயா பண்ணிட்டு இருந்ததை அங்க காசு கொடுத்து பண்ண வெச்சாங்க. அந்த நிகழ்ச்சியில் எந்தளவுக்கு நேர்மையா கலந்துக்கிட்டார்னு ஆர்யா தான் சொல்லணும்." என்றார்.

மறுப்பு

மறுப்பு

'எங்க வீட்டு மாப்பிள்ளை' சீசன் 2-வில் நீங்க கலந்துக்கப்போறதா சொல்றாங்களே என நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் ஜெகன் கேட்டதற்கு, "நான் கலந்துக்கப் போறேன்னு கிளப்பி விடாதீங்க. நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம்னு ரெண்டு பக்கமும் பெண்ட கழட்டுறாங்க. 60 நாள் ஷூட்லாம் வாய்ப்பே இல்லை" என மறுத்தார்.

கார்த்திக்

கார்த்திக்

"எட்டு மணிக்கு ஷூட்டிங்னா தயாரிப்பாளர் தனஞ்செயன் சாரும் அங்கே இருப்பார். இவர் உண்மையான ப்ரொஃபஷனல் ப்ரொடியூசர். கார்த்திக் சார் எனக்கு அண்ணன். தயாரிப்பாளர் சங்கப் பிரச்னைகளின்போது எனக்கு போன் பண்ணி ஆதரவா இருக்கேன்னு சொன்னார். குறுக்க யார் வந்தாலும் வெட்டிருவோம்னு சொன்னார்.

கிளாரிட்டி கொடுங்க

கிளாரிட்டி கொடுங்க

அப்புறம் ஒரு வேண்டுகோள். நடிகர்களின் மேனேஜர்கள் முக்கியமாக கதாநாயகிகளின் மேனேஜர்கள் தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்க. தயாரிப்பாளர்களுக்கு எல்லா விஷயங்களையும் தெளிவுபடுத்திருங்க. டேட்ஸ், டப்பிங், சம்பளம், எல்லா விவரங்களிலும் கிளாரிட்டி கொடுங்க. அது எல்லாவகையிலும் உதவிகரமா இருக்கும்" எனத் தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X