திரு-வுக்காக வந்தேனா.. வரு-வுக்காக வந்தேனா..? - சுசீந்திரனுக்கு பதிலளித்த விஷால்!

By Vignesh Selvaraj

Recommended Video

ஸ்ட்ரைக், வரலக்ஷ்மி, ஆர்யாவை பற்றி பேசிய விஷால்

சென்னை : இயக்குநர் திரு இயக்கத்தில் கௌதம் கார்த்திக், நவரச நாயகன் கார்த்திக் இணைந்து நடிக்க 'மிஸ்டர் சந்திரமௌலி' படம் உருவாகியிருக்கிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

இப்படத்தில் ரெஜினா, வரலட்சுமி, இயக்குநர் மகேந்திரன், இயக்குநர் அகத்தியன், சந்தோஷ், சதீஷ், ஜெகன், விஜி சந்திரசேகர், 'மைம்' கோபி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஷால் கலந்துகொண்டார். சுசீந்திரன் விஷாலை கிண்டல் செய்ய பிறகு பேசிய விஷால் யாருக்காக இந்த விழாவுக்கு வந்தேன் எனத் தெரிவித்தார்.

வம்பிழுத்த சுசீந்திரன்

வம்பிழுத்த சுசீந்திரன்

'மிஸ்டர் சந்திரமௌலி' இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் சுசீந்திரன், கடைசியாக நடிகர் விஷாலை விளையாட்டாகச் சீண்டிவிட்டுச் சென்றார். விஷால் இந்த விழாவில் கலந்துகொண்டது திருவுக்காகவா இல்லை வருவுக்காகவா என கிண்டலாக கேட்டார்.

திருவுக்காகவா வருவுக்காகவா

திருவுக்காகவா வருவுக்காகவா

பின்னர் விஷால் பேசும்போது, சுசீந்திரன் கேட்ட கேள்விக்கு பதிலளித்தார். "நான் என் நண்பன் திருவுக்காகவும், பெஸ்ட் ஃப்ரெண்ட் வருவுக்காகவும், நான் மதிக்கிற நடிகர் கார்த்திக், அவரது மகன் கௌதம் கார்த்திக் படத்துக்காகவும் இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டுள்ளேன்" எனக் கூறினார்.

அடுத்த படம்

அடுத்த படம்

மேலும், அவர் பேசுகையில், "ஒரு கதாநாயகியோடு ரெண்டு படம் சேர்ந்து நடிச்சாலே கிசுகிசு வரும். திருவோட மூணு படங்கள் பண்ணியிருக்கேன். கிசுகிசு வந்தாலும் பரவால்ல. அடுத்து இன்னொரு படம் பண்ணப்போறோம். திரு படத்துல யாராவது தண்ணிக்குள்ள மூழ்கிடுறாங்க. இந்தப் படத்துலயும் ஒரு பாட்டு தண்ணிக்குள்ளேயே இருக்கு." எனப் பேசினார்.

திரு - விஷால்

திரு - விஷால்

சத்யம்' படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த திரு, விஷாலின் நடிப்பில் 'தீராத விளையாட்டுப் பிள்ளை', 'சமர்', 'நான் சிகப்பு மனிதன்' ஆகிய மூன்று படங்களை இயக்கியிருக்கிறார். மீண்டும் விஷாலுக்காக கதை ரெடி செய்து வருகிறாராம் திரு. இவர் இயக்குநர் அகத்தியனின் மகள் கார்த்திகாவை திருமணம் செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X