”சிம்டாங்காரன்” ஓரமா போங்க! ”தல” யோட விஸ்வாசம் லிரிக்ஸ் வைரலாகுது
சென்னை: விஸ்வாசம் திரைப்படத்தின் பாடல் வரிகள் வெளியாகியுள்ளது.
சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் விஸ்வாசம். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
விஸ்வாசம் படம் குறித்து அவ்வப்போது சுவாரஸ்யமான பல தகவல்கள் கசிந்துகொண்டே வருகிறது. இந்த நிலையில், விஸ்வாசம் திரைப்படத்தில் இடம்பெறும் பாடல் வரி வெளியாகியுள்ளது.

வளர்ந்து வரும் பாடலாசிரியர் அருண்பாரதி இப்படத்தில் பாடல் எழுதியுள்ளார். அதில் அஜித்துக்காக எழுதிய பாடலில் " எத்தனை உயரம் இமயமல - அதில் இன்னொரு சிகரம் எங்க தல" என்ற வரியை மட்டும் சமீபத்தில் ட்விட்டரில் வெளியிட்டிருந்தார்.
சர்க்கார் படத்தின் சிம்டங்காரன் பாடல் வெளியாகி ட்ரெண்டாகி வரும் நிலையில் தல ரசிகர்கள் ஒன்றும் சளைத்தவர்கள் இல்லை என்பதுபோல அருண்பாரதி வெளியிட்ட வரிகளை வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.
அருண்பாரதி முதல்முறையாக அஜித்துக்கு பாடல் எழுதியுள்ளார். சண்டக்கோழி 2 திரைப்படத்திலும் பாடல் எழுதியுள்ளார். சண்டக்கோழி 2 திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள மீசை வச்ச வேட்டைக்காரன் பாடல் இவர் எழுதியதுதான்.
அஜித்தின் ரசிகரான இவர், தான் விஸ்வாசம் திரைப்படத்திற்கு பாடல் எழுதும்போது முதல்முறையாக அஜித்தை சந்தித்ததாக முகநூலில் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











