பட்டைய கிளப்ப தயாராகும் என்னங்க சார் உங்க சட்டம்... 3வது பாடல் வெளியீடு
சென்னை : வரும் 29ம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளது என்னங்க சார் உங்க சட்டம் படம்.
ஜோக்கர் படத்திற்கு பிறகு அரசியல் கலந்த காமெடி படமாக இந்தப் படம் உருவாகியுள்ளது.
இந்நிலையில் படத்தின் 3வது பாடல் தற்போது வெளியாகியுள்ளது. பல்லாங்குழி வேணாம் என்று தொடங்கும் அந்த பாடல் மெலடி பாடலாக வெளிவந்துள்ளது.

என்னங்க சார் உங்க சட்டம் படம்
அரசியலை காமெடியாக சொன்ன படம் ஜோக்கர். இந்தப் படம் வெளியானபோது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கும் உள்ளானது. இந்நிலையில் அதே பாணியில் உருவாகியுள்ள படம் என்னங்க சார் உங்க சட்டம். இந்தப் படத்தின் ட்ரெயிலர் சமீபத்தில் வெளியாகி சிறப்பான கவனத்தை பெற்றுள்ளது.

ஓடிடியில் ரிலீஸ்
கொரோனா காரணமாக படத்தின் வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்ட நிலையில், இந்தப் படம் திரையரங்கில் வெளியாகுமா என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. வரும் 29ம் தேதி சோனி லைவில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தை சதன் எஸ் மற்றும் ஜி ஜெயராம் இணைந்து தயாரித்துள்ளனர்.

29ம் தேதி ரிலீஸ்
பிரபு ஜெயராம் என்பவரது இயக்கத்தில் கார்த்திக் என்பவர் இந்தப் படத்தில் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷ்ன் பணிகள் சிறப்பாக நடைபெற்று வரும் வெள்ளிக்கிழமை படம் ஓடிடியில் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே தற்போதே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

வரவேற்பை பெற்ற போஸ்டர்
தற்போது அனைத்து படங்களும் திரையரங்குகளை நோக்கி படமெடுத்துவரும் நிலையில் இந்தப் படம் ஓடிடியில் ரிலீசாக உள்ளது. சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் பர்ஸ்ட் போஸ்டரும் சிறப்பான வரவேற்பை பெற்றது. இந்த போஸ்டரின் மூலம் எம்மதமும் சம்மதம் என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தியது. போஸ்டரை நடிகர் ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

குண பாலசுப்ரமணியன் இசை
படத்திற்கு இசையமைத்துள்ளார் குண பாலசுப்ரமணியன். அவரது இசையில் ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டு சிறப்பான வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது 3வது பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இதனை வெளியிட்டுள்ளார்.

3வது பாடல் ரிலீஸ்
பல்லாங்குழி வேணாம் என்று துவங்கும் அந்தப் பாடலை லிரிக் வீடியோவாக படக்குழு வெளியிட்டுள்ளது. பாடல் வரிகளை ஜெகன் கவிராஜ் எழுதியுள்ள நிலையில் பாடலை பாடியுள்ளார் மால்வி சுந்தரேசன். படத்தின் எடிட்டிங்கை பிரகாஷ் கருணானிதி. மொத்தத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படம் அதை பூர்த்தி செய்யுமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











