சூர்யா 36 அப்டேட்: இசையமைப்பாளர் யார் தெரியுமா? #Suriya36
சென்னை: சூர்யாவை வைத்து செல்வராகவன் எடுக்கும் படத்திற்கு இசையமைக்கப் போவது யார் என்று தெரிய வந்துள்ளது.
தானா சேர்ந்த கூட்டம் படத்தை அடுத்து சூர்யா செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கிறார். தற்போதைக்கு சூர்யா 36 என்று பெயரிடப்பட்டுள்ள படம் குறித்து அவரின் ரசிகர்கள் செல்வராகவனிடம் அப்டேட் கேட்டனர்.
இந்நிலையில் செல்வராகவன் அப்டேட் கொடுத்துள்ளார்.
செல்வராகவன்
சூர்யா 36 படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளார் என்று ட்விட்டர் மூலம் அறிவித்துள்ளார் செல்வராகவன். யுவனுடன் சேர்ந்து மீண்டும் பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைந்துள்ளார் செல்வா.

மகிழ்ச்சி
செல்வராகவனின் ட்வீட்டை பார்த்த சூர்யா ரசிகர்கள் ஹிட் பாடல்கள் வேண்டும். வாழ்த்துக்கள் யுவன் சார் என்று யுவன் ஷங்கர் ராஜாவை வாழ்த்தியுள்ளனர்.

நனவு
செல்வராகவன், யுவன் கனவுக் கூட்டணி மீண்டும் சேர்ந்துள்ளது. வரும் தீபாவளிக்கு சூர்யா 36 பட பாடல்கள் தெறிக்க போகிறது என்று ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ரகுல் ப்ரீத்
சூர்யா 36 படத்தில் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி என்று இரண்டு ஹீரோயின்கள் உள்ளனர். இந்த தீபாவளி சூர்யா தீபாவளி என்று ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











