நட்புதான் பர்ஸ்ட்.. பணமெல்லாம் அடுத்துதான்.. யுவன் சங்கர் ராஜா ஓபன் டாக்
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் பேய்பசி திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது.
Recommended Video

சென்னை: யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள பேய் பசி திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
ஹாரர் த்ரில்லர் படமாக பேய்பசி திரைப்படம் உருவாகியிருக்கிறது. முழுக்க முழுக்க ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோருக்குள்ளேயே நடக்கும் சம்பவங்கள்தான் படத்தின் கதை.

இத்திரைப்படத்தை நலன்குமாரசாமியுடன் சேர்ந்து திரைக்கதை அமைத்து ஸ்ரீநிவாஸ் கவினயம் இயக்கி இருக்கிறார். ரைஸ் ஈஸ்ட் கிரியேஷன் சார்பில் ஸ்ரீநிதி ராஜாராம் தயாரித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற பேய்பசி திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், வெங்கட்பிரபு, ஆர்யா, யுவன் ஷங்கர் ராஜா, ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்தப்படத்தில் ஒரே ஒரு புரோமோ பாடல் மட்டுமே உள்ளதாக படத்தின் இயக்குனர் ஸ்ரீநிவாஸ் தெரிவித்தார்.
அப்போது பேசிய இசையமைப்பாளர் யுவன், படத்தின் நாயகன் ஹரி கிருஷ்ணா பள்ளிக்காலத்திலிருந்தே நண்பன் எனக் கூறினார். ஹரிக்காக ஒரு படத்தை தயாரிக்கலாம் என நினைத்தப்போது ஹரி இலங்கைக்கு சென்றுவிட்டார்.
இப்போது ஹரிக்கு ஒரு படம் சாத்தியமாகியிருக்கிறது. ஹரியின் நட்புக்காக இந்தபடத்திற்கு நான் தான் இசையமைக்க வேண்டுமென முடிவெடுத்தேன். அவருடைய நட்புதான் முக்கியம் பணம் இரண்டாம் பட்சம்தான் என யுவன் தெரிவித்தார்.
இயக்குனர் வெங்கட்பிரபு பேசும்போது... இந்த படத்தின் இயக்குனர் ஸ்ரீநிவாஸ் புது முயற்சி எடுத்துள்ளார். இந்தக் கதையைச் சொல்லி எப்படி தயாரிப்பாளரை சம்மதிக்க வைத்தார் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது எனக் கூறினார்.


Click it and Unblock the Notifications











