புதுப்பேட்டைக்கு மியூசிக் வீடியோ… புதிய திட்டத்தில் யுவன் ஷங்கர் ராஜா!

புதுப்பேட்டை பாடலுக்கு மியூசிக் வீடியோ பண்ண உள்ளதாக யுவன் தெரிவித்துள்ளார்

Recommended Video

கோலிவுட் - பாலிவுட் சுட சுட செய்திகள் - வீடியோ

சென்னை: புதுப்பேட்டை பட பாடலுக்கு மியூசிக் வீடியோ வெளியிட உள்ளதாக யுவன் ஷங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர், பாடகர், தயாரிப்பாளர் என பல வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருபவர் யுவன் ஷங்கர் ராஜா.

Yuvan planning to do music video for Pudhupettai!

இயக்குனர் கதிரிடம் உதவி இயக்குனராக இருந்தவர் ரா.சிரில். 2012 ஆம் ஆண்டு பேசு என்ற படத்தை இயக்கினார். சில காரணங்களால் படம் வெளியாகவில்லை. இன்னும் இப்படம் வெளியாகாமலே இருக்கிறது.

ஆனால் இத்திரைப்படத்திற்காக யுவன் இசையமைத்த பாடல்கள் அந்த காலகட்டங்களில் பண்பலையில் அதிக முறை ஒலிபரப்பப்பட்டன. அதிலும் குறிப்பாக "வெண்ணிற இரவுகள் காதலின் மௌனங்கள்" என்ற பாடல் யுவனின் மாஸ்டர் பீஸ்களில் முக்கியமானது. அப்பாடலை கவிஞர் சினேகன் எழுதியிருந்தார்.

அப்பாடலைப் பற்றி புகழ்ந்து பத்திரிகையாளர் ஒருவர் ட்வீட் செய்ததற்கு பதிலளித்துள்ள யுவன், அவருக்கும் அது மிகவும் பிடித்தபாடல் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அப்பாடலுக்கு மியூசிக் வீடியோ பண்ண உள்ளதாகவும், அதேபோல் புதுப்பேட்டை பட பாடலுக்கும் மியூசிக் வீடியோ பண்ணும் திட்டம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

புதுப்பேட்டை மற்றும் வெண்ணிற இரவுகள் பாடல் மியூசிக் வீடியோ என்பது நிச்சயம் யுவனின் இசை ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும். அடுத்ததாக யுவன் செல்வா கூட்டணியில் உருவாகும் என்.ஜி.கே ஆல்பத்திற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X