25 வருட இசை பயணத்தை சென்னையில் கொண்டாடும் யுவன்.. எப்போ தெரியுமா? வேறலெவல் அப்டேட்!
சென்னை: யுவன் சங்கர் ராஜா இசையில் நாளை விருமன் படம் வெளியாக உள்ளது. இந்நிலையில், தனது இசை ரசிகர்களுக்கு இன்னொரு ஸ்வீட்டான அப்டேட்டை கொடுத்து கொண்டாட்ட மோடுக்கு மாற்றி உள்ளார் யுவன் சங்கர் ராஜா.
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி அதற்குள் 25 ஆண்டுகள் ஆகிவிட்டது.
தனது 25 வருட இசை பயணத்தை வெளிநாடுகள் மற்றும் இந்தியா என இசைக் கச்சேரிகளை நடத்தி கொண்டாடி வருகிறார் யுவன் சங்கர் ராஜா.

யுவன் 25
சமீபத்தில் யுவன் 25 நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இளையராஜா உள்ளிட்ட பிரபலங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு யுவன் சங்கர் ராஜாவை வாழ்த்தியும் பாராட்டியும் பேசினர். 1997ம் ஆண்டு சரத்குமாரின் அரவிந்தன் படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆனவர் யுவன் சங்கர் ராஜா.

காதல் மன்னன்
யுவன் சங்கர் ராஜாவின் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, மெளனம் பேசியதே, வல்லவன், யாரடி நீ மோகினி, பருத்திவீரன், சிவா மனசுல சக்தி, பையா என ஏகப்பட்ட படங்களில் அவரது காதல் பாடல்களை இன்னமும் இளைஞர்கள் கேட்டு மயங்கி வருகின்றனர்.

உலக டூர்
தனது 25 வருட இசை பயணத்தை முன்னிட்டு உலகம் முழுக்க ஏகப்பட்ட கச்சேரிகளை நடத்தி கலக்கி வருகிறார் யுவன் சங்கர் ராஜா. அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் எல்லாம் தனது இசை டூரை நடத்தி விட்டு மீண்டும் சென்னையில் ஒரு கச்சேரியை நடத்த திட்டமிட்டுள்ளார் யுவன் சங்கர் ராஜா.

சென்னையில் யுவன்
வரும் செப்டம்பர் மாதம் தனது சென்னை ரசிகர்களுக்காக ஒரு பிரம்மாண்ட கச்செரியை நடத்த திட்டமிட்டுள்ளார் யுவன் சங்கர் ராஜா. அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் யுவன் சங்கர் ராஜா. அவரது அப்டேட்டை பார்த்ததும் தேதியை சொல்லுங்க என ரசிகர்கள் ஆர்வமாகி உள்ளனர்.
விருமனில் வெறியாட்டம்
யுவன் சங்கர் ராஜா இசையில் கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள விருமன் படத்தின் கஞ்சா பூவு கண்ணால பாடல் எல்லாம் ஏற்கனவே பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்த நிலையில், நாளை தியேட்டர்களில் யுவனின் இசையோடு விருமனின் வெறியாட்டம் களைகட்டப் போகிறது.


Click it and Unblock the Notifications