என்ஜாய் எஞ்சாமி தெருக்குரல் அறிவுடன் இணையும் யுவன் சங்கர் ராஜா.. அசத்தல் அப்டேட்!

சென்னை: இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தெருக்குரல் அறிவுடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

Enjoy Enjaami Album Launch Pressmeet | Singer Dhee, Arivu | Independent Song Launch

பிரபல தமிழ் ராப் பாடகர் தெருக்குரல் அறிவு. பின்னணி பாடகராகவும் பாடலாசிரியராகவும் வலம் வருகிறார்.

விஜய்யின் மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி ரெய்டு மற்றும் தீயுடன் என்ஜாய் எஞ்சாமி ஆகிய பாடல்களை பாடியுள்ளார். அதன்மூலம் பெரும் பிரபலமானார்.

பாடல்களை பாடியுள்ளார்

பாடல்களை பாடியுள்ளார்

தொடர்ந்து காலா, வட சென்னை, நட்பே துணை, இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, பட்டாஸ், டகால்டி, நாடோடிகள் 2, ஜிப்ஜி, சூரரைப்போற்று, துக்ளக் தர்பார், மண்டேலா ஜகமே தந்திரம், சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களிலும் பாடல்களை எழுதியும் பாடியுள்ளார் தெருக்குரல் அறிவு.

தெருக்குரல் அறிவு

தெருக்குரல் அறிவு

சுந்தர் சி இயக்கத்தில் ரிலீஸ்க்கு தயாராக உள்ள அரண்மனை 3 படத்திலும் பாடல் எழுதி பாடியுள்ளார் தெருக்குரல் அறிவு. மேலும் அஜித்தின் வலிமை படத்திலும் பாடல் எழுதி பாடியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில் தெருக்குரல் அறிவு குறித்த மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.

எக்ஸைட்டிங் அப்டேட்

எக்ஸைட்டிங் அப்டேட்

அதாவது இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசையில் தெருக்குரல் அறிவு பாடிய பாடல் குறித்த அப்டேட் வரலாம் என தெரிகிறது. தெருக்குரல் அறிவுடன் இருக்கும் போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ள யுவன் சங்கர் ராஜா எனது சகோதரருடன் இரண்டு எக்ஸைட்டிங் அப்டேட் என பதிவிட்டுள்ளார்.

வலிமை பாடல் வெளியீடு?

வலிமை பாடல் வெளியீடு?

இதனை பார்த்த அஜித் மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் ரசிகர்கள், வலிமை அப்டேட்டாக இருக்குமோ என குழம்பி வருகின்றனர். வலிமை படத்தின் இரண்டாவது சிங்கிளில் தெருக்குரல் அறிவு சம்பந்தப்பட்டிருக்கலாம் என ரசிகர்கள் யூகித்து வருகின்றனர். வலிமை படத்தின் முதல் சிங்கிள் ட்ராக்கான நாங்க வேற மாரி பாடலை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். இந்த பாடல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X