யுவன் ஃபிளேவர்ல பாட்டு வேணும்னு அடம்பிடித்த விஜய்.. மட்ட பாடல் உருவான விதம் சொன்ன யுவன் சங்கர் ராஜா!
சென்னை: நடிகர் விஜயின் கோட் படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியிருந்த நிலையில் இந்த படத்தின் ஒட்டுமொத்த கலெக்சன் 455 கோடி ரூபாய் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் அறிவித்துள்ளது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்த நிலையில் படத்தின் பாடல்கள் முன்னதாக வெளியாகியிருந்தன.
இந்தப் படத்தின் மட்ட பாடலைத் தவிர மற்ற பாடல்களுக்கு எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களிடையே வரவேற்பு கிடைக்கவில்லை. குறிப்பாக விசில் போடு பாடல் அதிகமாக விமர்சிக்கப்பட்டது. மட்ட பாடலில் விஜய் மற்றும் திரிஷா இணைந்து ஆட்டம் போட்ட நிலையில் இந்தப் பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் இந்த பாடல் உருவான விதம் குறித்து யுவன் சங்கர் ராஜா தன்னுடைய பேட்டி ஒன்றில் தற்போது பேசியுள்ளார்.

விஜய்யின் கோட் படம்: நடிகர் விஜய்யின் கோட் படம் கடந்த மாதம் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ்சாகி ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பையும் அதே நேரத்தில் கலவையான விமர்சனங்களையும் பெற்றது. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியிருந்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். படத்தின் பாடல்களும் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் விஜய் மற்றும் திரிஷா இணைந்து ஆட்டம் போட்டிருந்த மட்ட பாடல் ரசிகர்களை கவர்ந்து ரசிகர்களை ஆட்டம் போட வைத்தது. விஜய் மற்றும் சினேகாவின் மகனாக நடித்திருந்த விஜய் மற்றும் திரிஷா இந்த பாடலில் ஆட்டம் போட்டிருந்தனர்.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா: இதனிடையே மட்ட பாடல் குறித்து தற்போது யுவன் சங்கர் ராஜா பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். முன்னதாக இந்த பாடலுக்கு வேறு இரு ட்யூன்களை போட்டிருந்ததாகவும் அதை பார்த்த விஜய், இதுபோல இல்லாமல் யுவன் சங்கர் ராஜா ஃபிளேவரில் தனக்கு பாடல் வேண்டும் என்று அடம் பிடித்ததாகவும் யுவன் சங்கர் ராஜா இந்த பேட்டியில் கூறியுள்ளார். இதையடுத்து விஜய்யின் எதிர்பார்ப்பை தான் புரிந்துக் கொண்டதாகவும் அடுத்ததாக மட்ட பாடல் உருவானதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக கோட் படத்திற்கு இசையமைக்கும் போது அதிகமான பிரஷரை யுவன் சங்கர் ராஜா சந்தித்ததாக படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்திருந்தார்.
பிரஷரில் இசையமைத்த யுவன்: யுவன் சங்கர் ராஜாவின் தங்கை பவதாரணி இறந்த துக்கத்தை மனதில் வைத்துக்கொண்டு கோட் படத்திற்கும் இசையமைத்த யுவன் சங்கர் ராஜா, விஜய்க்கு சிறப்பான பாடல்களை கொடுக்க வேண்டும் என்ற பிரஷரில் அடுத்தடுத்து பாடல்களுக்கு டியூன் போட்டதாகவும் வெங்கட் பிரபு கூறியிருந்தார். இந்நிலையில் படத்தின் பாடல்கள் படத்தின் ரிலீஸ்க்கு முன்னதாக லிரிக் வீடியோக்களாக வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றன. ஆனால் இந்த படத்தின் மட்ட பாடல் மட்டும் ரசிகர்களை சிறப்பாக கவர்ந்த நிலையில் படத்தின் ரிலீஸுக்கு பிறகு மற்ற பாடல்களையும் ரசிகர்கள் கொண்டாட தொடங்கினர்.
கோட் படத்தின் முதல் நாள் வசூல்: கோட் படம் கடந்த மாதம் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசான நிலையில் கடந்த 3ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியிலும் வெளியானது. இந்நிலையில் படத்தின் சர்வதேச பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் குறித்து ஏஜிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. படத்தின் ஒட்டுமொத்த கலெக்ஷன் 455 கோடி ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. படம் சர்வதேச பாக்ஸ் ஆபீசில் முதல் நாளில் மட்டுமே 126 கோடி ரூபாய் வசூலித்துள்ள நிலையில் தற்போது வெளியாகியுள்ள வேட்டையன் படத்தின் வசூலுடன் இதை விமர்சகர்கள் ஒப்பிட்டு வருகின்றனர். கோட் படம் முதல் நாளிலேயே வெளிநாடுகளிலும் சிறப்பான வசூலை பெற்றது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











