Just In
- 3 min ago
ஏலே.. நான் கண்ணாடி மாதிரில. மிரட்டும் சிம்புவின் லேட்டஸ்ட் போட்டோ.. குவியுது லைக்ஸ்!
- 22 min ago
கடல் கன்னி ஃபீலாம்.. மணலில் ஒய்யாரமாய் படுத்திருக்கும் பிக்பாஸ் பிரபலம்.. தெறிக்கவிடும் போட்டோஸ்!
- 47 min ago
குழந்தை போல இடுப்பை ஆட்டி.. கொள்ளை அழகை உலகுக்குக் காட்டி... செம லீசா!
- 57 min ago
செம கச்சிதம்.. பாலா தோளை உரசியபடி ரம்யா.. வைரஸ் போல பரவும் போட்டோ!
Don't Miss!
- News
சூரப்பாவுக்கு எதிரான விசாரணை ஆணையத்தின் அறிக்கை மீது இறுதி முடிவு எடுக்ககூடாது- ஹைகோர்ட்
- Sports
போட்டியே நடக்காது.. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஷாக் கொடுத்த ஐபிஎல் நிர்வாகம்.. எதிர்பாராத டிவிஸ்ட்!
- Automobiles
பள்ளி பேருந்துகள் ஏன் மஞ்சள் நிறத்தில் உள்ளன தெரியுமா? பெற்றோர்களை ஆச்சரியப்பட வைக்கும் அறிவியல் காரணம்!
- Finance
தினமும் 100 கோடி ரூபாய்.. அசத்தும் பாஸ்டேக் வசூல்.. மீண்டும் புதிய உச்சம்..!
- Lifestyle
சர்க்கரை நோயாளிகளே! நீங்க எந்த பழம் சாப்பிடலாம்-ன்னு சரியா தெரியலையா? இத படிங்க...
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இணையத்தில் பட்டையை கிளப்பும் யுவன் சங்கர் ராஜாவின் டாப் டக்கர் பாடல்.. 25 மில்லியன் கடந்து சாதனை !
சென்னை: தென்னிந்திய திரையுலகின் இசை பிதாமகன்களில், ஒருவராக விளங்குபவர் யுவன் சங்கர் ராஜா. தமிழகத்தில் அவருக்கு, வெறித்தனமான பெரும் ரசிகர் கூட்டம் இருப்பது அனைவரும் அறிந்ததே.
ஆனால் அவர் இசையில் உலகளவில் சாதனை படைத்த "ரௌடி பேபி" பாடலுக்கு முன்னதாகவே, உலகமெங்கும் மொழியை கடந்து, அவரை பின்பற்றும் ஒரு பெரும் ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது யுவன் சங்கர் ராஜா, இந்திய இசை பிரபலங்களான பதா மற்றும் உஜானா அமித் ஆகியோருடன் டாப் டக்கர் ( Top Tucker) எனும் ஒரு சுயாதீன இசை பாடலில் இணைந்துள்ளார்.

கனவு நாயகி ராஷ்மிகா
இப்படாலுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, பதா மற்றும் உஜானா அமித் பாடலை பாடியுள்ளனர். மூவரும் இணைந்து திரையில் தோன்றி கலக்கியிருக்கும் இப்பாடலில், இவர்களுடன் தற்போதைய இளைஞர்களின் கண்கவர் கனவு நாயகி ராஷ்மிகா மந்தனாவும் நடித்துள்ளார்.

குரல் தந்து
இப்பாடலின் ஒரு சிறு பகுதியில் தமிழில் வரும் வரிகளை யுவன் சங்கர் ராஜா தானே பாடியுள்ளார். மேலும் ஜொனிடா காந்தி அவர்களும் ஒரு சிறு பகுதிக்கு குரல் தந்துள்ளார். ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுள்ள இப்பாடல் YouTube தளத்தில் வெளியான மிகக்குறுகிய நேரத்தில் 25 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

உன்னிகிருஷ்ணன், கமல்ஹாசன்
ஒவ்வொரு நொடியும் ரசிகர்களின் பார்வை எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. மொழி எல்லைகளை கடந்து, தற்போது அனைத்து இசை ரசிகர்களையும் கவர்ந்து, சாதனை படைத்து வருகிறது.யுவன் சங்கர் ராஜாவின் திரை இசையில்லாத சுயாதீன இசை பயணம் ஜூலை 1999ல் "The Blast" ஆல்பத்தில் துவங்கியது. இந்த ஆல்பம் தமிழின் முன்னணி பிரபலங்கள் உன்னிகிருஷ்ணன், கமலஹாசன் உட்பட பலர் பாடியுள்ள 12 பாடல்கள் தொகுப்பினை கொண்டது.

இசை ஆல்பங்களை
தனது U1 Records இணையதளம் மூலம் பல சுயாதீன இசை முன்னெடுப்புகளையும், பல இசைத்திறமைகளையும் தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறார் யுவன் சங்கர் ராஜா. தொடர்ந்து தனது இசையில் திரை இசை தவிர்த்த சுயாதீன இசை ஆல்பங்களை வளரும் கலைஞர்களுடன் இணைந்து உருவாக்குவதில் வெகு ஆர்வமுடன் இயங்கி வருகிறார்.