இளம் பாடகர்களின் இசை ஆல்பங்களுக்கு அங்கீகாரம்! - புது ரூட்டில் பயணிக்கும் இசையமைப்பாளர் யுவன்

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் யுவன் சங்கர் ராஜா, தற்போது திரைப்படங்கள் தயாரிப்பதில் ஈடுபட்டிருப்பதோடு 'யு-1 ரெக்கார்ட்ஸ்' என்ற இசை நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்நிறுவனம் மூலம் திரைப்பட இசைப் பாடல்களை வெளியிட்டு வந்த யுவன், தற்போது இளம் பாடகர்கள் மற்றும் இசையமைப்பாளர்களின் இசை ஆல்பங்களையும் வெளியிட தொடங்கியுள்ளார்.

தான் இசையமைக்கும் திரைப்படங்களில் இளம் பாடகர்களுக்கும், இசைக் கலைஞர்களுக்கும் வாய்ப்பு கொடுப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், சினிமா அல்லாத இசை ஆல்பங்களை உருவாக்கும் பாடகர்கள் மற்றும் இசைக் கலைஞர்களை ஊக்குவிக்க முடிவு செய்திருக்கும் யுவன் சங்கர் ராஜா, தனது யு-1 ரெக்கார்ட்ஸ் நிறுவனம் மூலமாக அவர்களை அங்கீகரித்து வருகிறார்.

Yuvan Shankar Rajas U1 Records release Priya Malis Kadhal Kondattam album

அந்த வகையில், 'துளி தீ' என்ற இசை ஆல்பம் மூலம் யூடியுபில் பிரபலமான மாணவி பிரியா மாலியின் 'காதல் கொண்டாட்டம்' இசை ஆல்பத்தை யுவன் தனது யு-1 ரெக்கார்ட்ஸ் மூலம் வெளியிடுகிறார். இதன் மூலம் இளம் பாடகி பிரியா மாலிக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.

இது குறித்து கூறிய பிரியா மாலி, "ஆத்மார்ந்தமான அன்பைக் கொண்டாடுவது என்பதுதான் இந்த இசை ஆல்பத்தின் அடிப்படை. எளிமையாகவும் அமைதியாகவும் நான் கட்டமைக்க நினைத்த இந்த ஆல்பத்தை தொழில் நுட்பக் குழுவினர், சிறந்த பின்னணிக் காட்சிகளுடன் கண்கவரும் விதத்தில் உருவாக்கியிருந்தனர். யுவன் சங்கர் ராஜா சார் என் மீது கொண்டிருந்த நம்பிக்கைக்காவும், இந்த வாய்ப்பை எனக்கு வழங்கியதற்காகவும் அவருக்கு இந்த ஆல்பத்தை அர்பணிக்கிறேன். இந்த ஆல்பம் உருவாக எனக்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும், குறிப்பாக பாடலை எழுதிய எனது தந்தை வி.ஆர்.மாலி அவர்களுக்கும் நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். " என்று தெரிவித்தார்.

Yuvan Shankar Rajas U1 Records release Priya Malis Kadhal Kondattam album

பிரியா மாலி இசையமைத்துப் பாடிய 'துளி தீ' ஆல்பம், யுடியூப் சேனல் மற்றும் இதர இசைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. பன்முகத் திறமை மிக்க பிரியா மாலி பாடலுக்கு இசையமைத்து பாடியதுடன் நடித்திருப்பது, வெகுவான பாராட்டுதல்களை குவித்து வருகிறது. செவிக்கினிய குரல் வளத்துடன், கண்களைக் கவரும் விதத்தில் தோன்றியதற்காக கிடைத்து வரும் அபரிமிதமான பாராட்டு மழையால் பிரியா மாலி அகம் மகிழ்ந்து வருகிறார்.

Yuvan Shankar Rajas U1 Records release Priya Malis Kadhal Kondattam album

தற்போது, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் அங்கீகாரம் கிடைத்திருப்பதால், தமிழ் சினிமாவின் பார்வை பிரியா மாலி மீது திரும்பியுள்ளது. எனவே, விரைவில் அவர் கோடம்பாக்கத்தின் குயிலாக பறப்பார், என்று எதிர்ப்பார்க்கலாம்.

அதேபோல், இளம் பாடகர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள இருக்கும் யுவன் சங்கர் ராஜாவின் யு-1 ரெக்கார்ட்ஸ் சினிமா அல்லாத பாடகர்களை கண்டறிந்து அவர்களது திறமைகளை உலகிற்கு தெரியப்படுத்தும் விதமாக, அவர்களது படைப்புகளை அங்கீகரிக்க முடிவு செய்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X