»   »  செம கருத்தை ஜாலியாக சொல்லும் 'ஜீரோ தாண்டா ஹீரோ' பாடல்!

செம கருத்தை ஜாலியாக சொல்லும் 'ஜீரோ தாண்டா ஹீரோ' பாடல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : தன்னை தாழ்த்திக்கொள்வது தான் உயர்வு என்ற காந்தியடிகளின் கூற்றுக்கேற்ப "ஜீரோ தாண்டா ஹீரோ" என்ற பாடலை இயக்குனர் ராசி அழகப்பன் எழுத இசையமைப்பாளர் குரு கல்யாண் இசையமைத்து பாடி வெளியிட்டுள்ளார்.

ஹீரோவாகவே கனவு காணும் இளைஞர்களுக்கு இப்பாடல் ஒரு விழிப்புணர்வாக அமையும் என்கிற எண்ணத்தில் இந்தப் பாடலை உருவாக்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளார் இப்பாடலின் இசையமைப்பாளரும், பாடகருமான குரு கல்யாண்.

Zero is the hero youtube song

இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை விதைக்கும் விதத்தில் இருக்கிறது இந்தப் பாடல். வாழ்க்கையில் கடினமான தருணங்களை எப்படி எதிர்கொள்ளவேண்டும் என ஜாலியான பாடலின் மூலம் அழகாக விளக்கியிருக்கிறார்கள்.

மகாத்மா காந்தி, அப்துல்கலாம் ஆகியோர் கூறிய வாசகங்களை எடுத்துக்காட்டி, இளைஞர்கள் விரும்பும் விதத்தில் இந்தப் பாடலை ட்ரெண்டியாக கொடுத்திருக்கிறார்கள்.

Read more about: song youtube பாடல்
English summary
Music director Guru kalyan relased 'Zero is the hero' song on youtube. Director Rasi Azhagappan penned lyrics for this song.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil