நடிகை கே.ஆர்.விஜயாவிடம் ரூ. 1 லட்சம் மோசடி-டிரைவரிடம் விசாரணை

நடிகை கே.ஆர்.விஜயா தி.நகரில் வசித்து வருகிறார். இவரிடம் கடந்த சில வருடங்களாக தமிழ்வாணன் என்பவர் டிரைவராக இருந்து வந்தார். இவர் மிகவும் விசுவாசமாக நடந்து கொண்டதால் பல முக்கிய வேலைகளை இவரை நம்பி ஒப்படைப்பாராம் விஜயா.
இந்த நிலையில், கே.ஆர்.விஜயாவின் காசோலையை திருடி அதைப் பயன்படுத்தி ரூ. 1 லட்சம் பணத்தை தமிழ்வாணன் மோசடியாக எடுத்து விட்டதாக தனது மகள் ஹேமலதா மூலம் கே.ஆர்.விஜயா, போலீஸில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து போலீஸார் தமிழ்வாணனை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
actress krvijaya டிரைவர் தமிழ்வாணன் நடிகை கேஆர்விஜயா பண மோசடிப் புகார் driver tamilvanan money cheating complaint


Click it and Unblock the Notifications