காங்.கில் விஜய் இணைந்தால் படங்களைப் புறக்கணிப்போம் - கனடா தமிழ் சங்கம்

By Staff

டோரன்டோ: ஈழத் தமிழர்கள் படுகொலைக்கு இலங்கை அரசுக்கு போர் பலமும், ஆன்ம பலமும் கொடுத்து உதவிய காங்கிரஸ் கட்சியில் நடிகர் விஜய் இணைந்தால் அவருடைய படங்களை ஒட்டுமொத்தமாக புறக்கணிப்போம் என்று கனடா தமிழ் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஏற்கனவே கனடா படைப்பாளிகள் கழகமும் இதேபோன்ற எச்சரிக்கையை விடுத்துள்ளது நினைவிருக்கலாம். இந்த நிலையில் கனடா தமிழ் சங்கமும் விஜய்யை எச்சரித்துள்ளது.

இதுகுறித்து கனடா தமிழ் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடிகர் விஜய் அரசியலில் ஈடுபடுவதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் அவர், ஈழத்தமிழர்களின் படுகொலைக்கு இலங்கை அரசுக்கு போர் பலமும், ஆன்ம பலமும் கொடுத்துதவிய, இந்திய காங்கிரஸ் கட்சியில் இணைந்தால் அவருடைய படங்களை புறக்கணிப்போம்.

ஒரு தமிழனாக இந்த அறிக்கைக்கு விஜய் மரியாதை செலுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பரவி வாழும் ஈழத் தமிழர்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சி மீதும், அதன் தலைவர் சோனியா காந்தி மீதும், மத்திய அரசின் மீதும் பெரும் வெறுப்புணர்வு நிலவுகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் விஜய் சேரப் போவதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து புலம் பெயர்ந்த தமிழ் அமைப்புகள் சார்பில் அடுத்தடுத்து மிரட்டல்கள் வந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X