தேர்தல் வழக்கு-நடிகர் ரித்தீஷுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

கடந்த மே மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் இருந்து நடிகர் ரித்தீஷ், திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆனால், இவரது வெற்றி செல்லாது என கூறி அதிமுக வேட்பாளர் சத்தியமூர்த்தி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில்,
ரித்திஷ் வாக்காளர்களுக்கு ஓட்டு போட பணம் கொடுத்துள்ளார். அவர் ரூ. 25 கோடிக்கு மேல் சொத்து சேர்த்துள்ளார். மேலும், அவர் இந்திய குடிமகன் கிடையாது. இலங்கையை சேர்ந்தவர். அவருடைய பெற்றோர் கண்டியில் வசிக்கிறார்கள்.
இவர் வெற்றி பெற்றாதை செல்லாது என அறிவித்து, இரண்டாவது இடம் பிடித்த நான் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என அதில் சத்தியமூர்த்தி கூறியிருந்தார்.
இந்த வழக்கு நேற்று நீதிபதி கே சந்துரு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தனது உத்தரவில், நடிகர் ரித்தீஷ் நான்கு வாரங்களுக்கு பதில் தர வேண்டும். இது தொடர்பாக ரித்தீஷுக்கும், தேர்தல் அதிகாரிக்கும் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றார்.


Click it and Unblock the Notifications











