கலாச்சாரத்தை சீரழிக்கிறார் அமலா பாலுக்கு இந்து மக்கள் கட்சி கண்டனம்!

By Chakra

விருந்து, கேளிக்கைகள்தான் பெண்களுக்குப் பிடித்தமான சமாச்சாரம் என்பதுபோல பேட்டி கொடுத்துள்ள அமலா பால் கலாச்சார சீரழிவுக்கு துணை போகிறார் என இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

சிந்து சமவெளி படத்தில் சர்ச்சைக்குரிய பாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் அமலா பால்.அதில் மாமனாருடன் கள்ளக் காதல் வைத்திருப்பது போல் நடித்தார். அந்த கேரக்டரில் நடித்ததற்காக அமலா பாலுக்கு எதிர்ப்புகள் கிளம்பின.

தற்போது அவர் நடித்த மைனா படம் ரிலீசாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த ஒரே படம் மூலம் முன்னணிக்கு வந்துவிட்ட அவர், அடுத்து விக்ரம் ஜோடியாக தெய்வ மகன் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அமலா பால் அளித்த பேட்டியொன்றில், தான் ஒரு கேளிக்கைப் பிரியை என்றும், விருந்து கேளிக்கைகள் எனக்கு பிடித்தமானவை என்றும் கூறியுள்ளார்.

மேலும், "வார இறுதி விருந்துக்காக எப்போதும் காத்திருப்பதில்லை என்றும், எப்போதெல்லாம் சந்தோஷமாக இருக்கிறேனோ அப்போதெல்லாம் நண்பர்களை அழைத்து பார்ட்டி கொண்டாடுவேன். கேரளாவில் என்னை வீட்டில் பார்க்க முடியாது. நிறைய நேரம் நண்பர்களுடன் பார்ட்டிகளில்தான் இருப்பேன். என் வயது பெண்களுக்கு இது பிடித்திருக்கிறது", என்றெல்லாம் அவர் பேட்டி அளித்துள்ளார்.

இதற்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நடிகை அமலாபாலுக்கு இந்திய கலாசாரத்துக்கு எதிராக நடப்பது வாடிக்கையாகி விட்டது. சிந்து சமவெளி படத்தில் சக நடிகைகள் நடிக்கத் துணியாத கேரக்டரில் நடித்தார். அப்போதே அவரை கண்டித்தோம்.இயக்குனர் தான் பொறுப்பு என நழுவினார்.

இப்போது மேற்கத்திய பழக்கமான பார்ட்டி என்ற கேளிக்கை இரவு கூத்துகளுக்கு ஆதரவாக பேசி கலாசார சீரழிவுக்கு வழி வகுத்துள்ளார். அவர் பேட்டி இளம்பெண்கள் மனதை மாசுபடுத்துவது போல் உள்ளது.

இவர் பார்ட்டிகளுக்கு போய் புரட்சி செய்யட்டும். அதை பகிரங்கமாக பேசி பண்பாட்டை சிதைக்க வேண்டாம். இளம் பெண்கள் அனைவருமே இப்படிப்பட்டவர்கள்தான் என்ற எண்ணத்தை விதைக்கும் முயற்சி இது. இனியும் இது போன்ற கருத்துக்களை வெளியிட்டால் தக்க பாடம் புகட்டுவோம்," என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X