11 ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு இசையமைத்த ஜான் பார்ரி மரணம்!

மாரடைப்பு காரணமாக பார்ரி மரணம் அடைந்ததாக தெரிகிறது. முதலில் கடந்த 1963-ம் ஆண்டு வெளியான 'ருஷ்யா வித் லவ்' என்ற ஜேம்ஸ்பாண்டு படத்துக்கு இசை அமைத்தார்.அதைத் தொடர்ந்து 11 பாண்ட் படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து சாதனை படைத்தார்.
ஒரே மனைவி லாராவுடன் 33 ஆண்டுகள் வாழ்ந்த, இவருக்கு 4 குழந்தைகளும், 5 பேரக் குழந்தைகளும் உள்ளனர்.
'பார்ன் ப்ரீ', 'அவுட் ஆப் ஆப்ரிக்கா' போன்ற படங்களுக்காக 5 ஆஸ்கர் விருதுகள் பெற்றவர் பார்ரி. கோல்ட்பிங்கர் படத்துக்கும் இவர்தான் இசை.
ஜான் பார்ரி மறைவுக்கு ஹாலிவுட் திரைக் கலைஞர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.
Comments
ஆஸ்கர் விருது ஜான் பார்ரி ஜேம்ஸ்பாண்ட் படங்கள் மரணம் death hollywood james bond john barry oscar award


Click it and Unblock the Notifications