கோலிவுட், டோலிவுட் நட்சத்திரங்கள் மோதும் ஒரு ஜாலி டி 20
தெலுங்கு சினிமா நட்சத்திரங்களுக்கும் தமிழ் சினிமா நட்சத்திரங்களுக்கும் இடையே 20 ஓவர் கிரிக்கெட் போட்டி துபாயில் நடக்கிறது.
நாளை நடக்கும் இந்தப் போட்டியை நடிகர் அப்பாஸ் ஏற்பாடு செய்துள்ளார்.
இரு திரையுலகிலும் உள்ள இளம் நடிகர்கள் இந்தப் போட்டிகளில் இரு அணிகளாக நின்று ஆடப் போகிறார்கள்.
கோலிவுட் அணிக்கு கேப்டனாக அப்பாஸ் இருப்பார். இந்த அணியில் மாதவன், ஆர்யா, பரத், ஜெயம் ரவி, ஜீவா, சந்தானம், அதர்வா, ஜெய், நந்தா மற்றும் விக்ராந்த் உள்ளனர்.
டோலிவுட் அணிக்கு தருண் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதில் ரவி தேஜா, ஸ்ரீகாந்த், அய்யப்பா, அல்லாரி நரேஷ் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
Comments
தமிழ் சினிமா தமிழ் தெலுங்கு நடிகர்கள் மோதும் கிரிக்கெட் போட்டி தெலுங்கு சினிமா tamil and telugu actors to clash in t20 match tamil cinema telugu cinema


Click it and Unblock the Notifications