சூதாட்டம் எதிரொலி-மலையாளப் படத்திலிருந்து பாக். பவுலர் ஆசிப் நீக்கம்

By Sudha

Mohammad Asif
திருவனந்தபுரம்: கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு சிக்கியுள்ளதால் மலையாளப் படத்தில் நடிப்பதாக இருந்த பாகிஸ்தான் பந்து வீச்சாளர் முகம்மது ஆசிப் அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதை படத்தின் இயக்குநரான கைதப்புரம் தாமோதரன் நம்பூதிரி தெரிவித்துள்ளார்.

மலையாள திரையுலகின் பிரபல பாடலாசிரியர் கைதப்புரம். இவர் தற்போது மழவில்லின் நாட்டம் வரே (வானவில்லின் நுனி வரை) என்ற படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுக்கிறார். இப்படத்தில் முகம்மது ஆசிப் நடிப்பதாக இருந்தது. ஆனால் தற்போது அவர் கிரிக்கெட் சூதாட்ட சர்ச்சையில் சிக்கியுள்ளதால் ஆசிப்பை படத்தில் நடிக்க வைப்பது குறித்து திட்டத்தை கைவிட்டுள்ளார் கைதப்புரம்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ஆசிப்பை நடிக்க வைக்கும் யோசனையை விட்டு விட்டேன். அவரது வேடத்தில் வேறு ஒருவர் நடிப்பார். அவரும் பாகிஸ்தானியராகவே இருப்பார். இதற்காக 3, 4 வீரர்களை நினைத்துள்ளேன். அவர்களை அணுகி ஒருவரை தேர்வு செய்வேன் என்றார்.

இப்படத்தில் கிரிக்கெட் பயிற்சியாளர் வேடத்தில் ஆசிப் நடிப்பதாக இருந்தது. லாகூரிலிருந்து கண்ணூரில் நடைபெறும் கிரிக்கெட் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பயிற்சியை ஆசிப் பார்வையிடுவது போல காட்சி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X