மீரா வாசுதேவனின் விவாகரத்து கோரும் வழக்கு - செப். 7க்கு ஒத்திவைப்பு

விளம்பரப் படங்களில் நடித்து வந்தவர் மீரா வாசுதேவன். பின்னர் ஹீரோயினாக மாறினார். தமிழில் சில படங்களில் நடித்துள்ளார்.
இவருக்கும் பிரபல ஒளிப்பதிவாளர் அசோக்குமாரின் மகன் விஷாலுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதல் மலர்ந்தது. இதையடுதது இரு வீட்டார் சம்மதத்துடன் கல்யாணம் செய்து கொண்டனர்.
ஆனால் கல்யாணத்திற்குப் பின்னர் காதல் போனது, வாழ்க்கை கசந்தது. கருத்து வேறுபாடுகள் முற்றவே கணவர் வீட்டிலிருந்து பிரிந்து தாய் வீட்டுக்குப் போனார் மீரா.
மேலும், விவாகரத்து கோரி சென்னை குடும்ப கோர்ட்டில் மனுவும் தாக்கல் செய்தார். ஆனால் மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி விஷால் மனு செய்தார்.
மீரா வாசுதேவன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பதில் மனு தாக்கல் செய்ய விஷால் அவகாசம் கோரினார். இதையடுத்து செப்டம்பர் 7ம் தேதி வரை அவகாசம் கொடுத்த நீதிபதி அன்றைக்குள் பதிலளிக்குமாறு விஷாலுக்கு உத்தரவிட்டார்.


Click it and Unblock the Notifications











