twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜய் படங்களுக்கு தடை; அசினுக்காக காவலனுக்கு மட்டும் இலங்கை அனுமதி!

    By Shankar
    |

    கொழும்பு: விஜய்யின் படங்களுக்கு இனி இலங்கையில் அனுமதி இல்லை என்றும், 'சிங்களர்களின் நட்பு நடிகை ' அசின் நடித்திருப்பதால் காவலன் படத்துக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுவதாகவும் இலங்கை அரசு அறிவித்துள்ளது.

    விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயல்படும் தமிழ் நடிகர்களின் படங்களைத் திரையிடக்கூடாது என இலங்கை அரசு பட்டியலிட்டு வைத்துள்ளது.

    இப்போது அந்தப் பட்டியலில் விஜய் படத்தையும் சேர்த்துள்ளது அந்நாட்டு அரசு. நாகையில் இலங்கை அரசைக் கண்டித்து நடந்த கூட்டத்தில் பங்கேற்ற விஜய், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதை கடுமையாகக் கண்டித்தார்.

    மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்றும் இங்குள்ளவர்கள் ஒன்று சேர்ந்து எதிர்த்தால் இலங்கை உலக வரைபடத்திலிருந்தே காணாமல் போய்விடும் எனறும் ஆவேசமாகப் பேசினார். இந்த பேச்சுக்கள் சிங்களர்களையும் இலங்கை அரசையும் ஆத்திரமூட்டியுள்ளது. 'விஜய் படங்களை இலங்கையில் திரையிட அனுமதிக்கக்கூடாது' என்று எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    இந்த நிலையில் விஜய், அசின் ஜோடியாக நடித்த காவலன் படம் இலங்கையில் திரையிட அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி அளிக்கலாமா வேண்டாமா என்பது குறித்து இலங்கை அரசு அதிகாரிகள் கூடி ஆலோசித்தனர்.

    இறுதியில் 'இலங்கையின் நட்பு நடிகையான' அசின் இப்படத்தில் நடித்திருப்பதால் அவருக்காக படத்தை இலங்கையில் திரையிட அனுமதி அளிப்பதாக அறிவித்துள்ளனர்.

    தமிழ் திரையுலகினர் தடையை மீறி சில மாதங்களுக்கு முன் அசின் இலங்கை சென்றார். அங்கு நடந்த இந்தி படப்பிடிப்பில் பங்கேற்றார்.

    பிற நடிகர்கள் இலங்கை பயணத்தை தவிர்த்த நிலையில் அசின் இலங்கைக்கு வந்ததோடு, அந்நாட்டு அதிபர் ராஜபக்சே மனைவி ஷ்ராந்தியுடன் நல்ல சினேகமாகிவிட்டார்.

    இலங்கை அரசின் சார்பில் நடத்தப்பட்ட கண் சிகிச்சை முகாமுக்கு சிறப்பு அழைப்பாளராகப் போனார். தமிழர்களை அந்நாட்டு அரசு சிறப்பாகப் பார்த்துக் கொள்வதாகவும், விஜய், சூர்யா போன்ற நடிகர்கள் இலங்கைக்கு வரவில்லையே என்று தமிழர்கள் தன்னை ஆவலுடன் கேட்டதாகவும் அவர் தெரிவித்தது நினைவிருக்கலாம்.

    அசினின் இந்த சேவைக்காகவே அவரது படத்தை அனுமதித்துள்ளது இலங்கை!

    English summary
    The Sri Lankan govt announced a ban for screening Vijay films in Sri Lanka. But at the same time, the govt allows Vijay's Kaavalan just because of Asin's role as heroine in the same.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X