போதை வழக்கில் சிக்கிய ரவி தேஜா தம்பிகளுக்கு ஜாமீன்

நைஜீரியக் கும்பலிடமிருந்து கொகைன் போதைப் பொருளை வாங்கியதாக கடந்த 19ம் தேதி ரவி தேஜாவின் தம்பிகளான ரகுநாத ராஜு, பரத் ராஜு மற்று்ம் தொழிலதிபர் நரேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஜூபிளி ஹில்ஸ் பகுதியில் வைத்து அனைவரும் சிக்கினர். அவர்களிடமிருந்து 40 கிராம் கொகைன் பறிமுதல் செய்யப்பட்டது.
இவர்களுடன் நைஜீரியாவைச் சேர்ந்த சிமா கிளமென்ட் என்கிற விக்டர் என்பவரும் பிடிபட்டார். இவர்தான் கொகைனை நடிகரின் தம்பிகளுக்குக் கொடுத்தவர் ஆவார்.
இந்த நிலையில் தேஜாவின் தம்பிகள் மற்றும் நரேஷை நிபந்தனை ஜாமீனில் ஹைதராபாத் கோர்ட் விடுவிக்க உத்தரவிட்டுள்ளது. ஆளுக்கு தலா ரூ. 5000 ரொக்க ஜாமீன் கொடுத்து விடுதலையாகியுள்ளனர்.
வாரத்திற்கு 2 முறை துணை ஆணையர் முன்பு ஆஜராக வேண்டும், மறு உத்தரவு வரும் வரை ஹைதராபாத்தை விட்டுப் போகக் கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
Comments
தெலுங்கு நடிகர் ரவி தேஜா போதைப் பொருள் வழக்கு ரவி தேஜா தம்பிகளுக்கு ஜாமீன் drug case ravi teja brothers get bail telugu actor ravi teja


Click it and Unblock the Notifications