பாஜக எம்.பி. நடிகை ஹேமமாலினி வீட்டில் ரூ. 80 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை

மும்பை புறநகர்ப் பகுதியான காரேகானில் ஹேமமாலினியின் வீடு உள்ளது. இங்கு சனிக்கிழமை இரவு புகுந்த கொள்ளையர்கள், வீட்டில் இருந்த ரூ. 80 லட்சம் மதிப்புள்ள நகைககள், பொருட்களை திருடிக் கொண்டு தப்பி விட்டனர்.
61 வயதாகும் ஹேமமாலினி சம்பவம் நடந்த போது வீட்டில் இல்லை. நாக்பூர் போயிருந்தார். நேற்று காலை அவர் வீட்டுக்குத் திரும்பியபோது வீட்டில் உள்ள கப் போர்டில் வைத்திருந்த பணம், நகை, பொருட்கள் காணாமல் போயிருப்பதை பார்த்தார்.
ஜன்னல் கதவை உடைத்து உள்ளே திருடர்கள் புகுந்துள்ளனர். ரொக்கமாக ரூ. 75 லட்சமும், ரூ. 5 லட்சம் மதிப்பிலான, நகை, பொருட்களையும் திருடர்கள் களவாடிச் சென்றுள்ளனர்.
Comments


Click it and Unblock the Notifications